முசலியான்-
யுத்ததின் பின்பு மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேசத்தில் முஸ்லிம்கள் தங்களின் தாயக புமியில் மீள்குடியேறினார்கள் அந்த வகையில் புநொச்சிக்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள மணற்குளம் கிராம மக்கள் 2004 ஆம் ஆண்டு முசலி பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் கிராமங்களை விட முதலாவது மிள்குடியேறினர்.
அப்போதைய மீள்குடியேற்ற அமைச்சரர் றிசாட் பதீயுதின் வேண்டுகோளின் பேரில் 51 வீடுகஞடன் மீள்குடியேறிய கிராமமாக மணற்குள கிராமம் காணப்படுகின்றது இருந்தும் கிராமத்தின் உள்ளக வீதிகள் இன்னும் திருத்த படவில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதனால் மழைகாலங்களில் பாடசாலை மாணவர்கள்.முதியோர்கள் மற்றும் கற்பிணி தாய்மார்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாhகின்றார்கள்.
கடந்த மாதம் முசலி பிரதேச சபை உறுப்பிர்கஞக்கு குறிப்பட்ட ஒரு அமைச்சினால் தலா 1000000 ருபா நீதி பொது வேலைக்கு ஓதிக்கிடப்பட்டது இந்த நீதி 7 பிரதேச உறுப்பினர்கள் தங்களின் சொந்த கிராமங்கஞக்கு ஒதிக்கப்பட்டதாக ஒரு சில உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.முசலி பிரதேசத்தில் மீதியாக உள்ள பல கிராமங்கஞக்கு பொது வேலைகள் இடம்பெறாமல் உள்ளது.
என மணற்குளம் கிராமமத்தின் உள்ளக வீதியினை புணர்நிர்மாணம் செய்ய முசலி பிரதேச சபை செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் யாராவது நடவடிக்கை எடுப்பார்களா என மக்கள் எதிர்பார்கின்றார்கள்.
0 comments :
Post a Comment