அகில இன நல்லுறவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சாம ஸ்ரீ சமூக சேவையாளர் தேசிய விருது வழங்கும் விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை மாத்தறை ஹக்மன பௌத்த வித்தியாலயத்தில் நடைபெற்றது.
அகில இன நல்லுறவு ஒன்றியத்தின் தலைவர் சாம ஸ்ரீ ஆனந்த சரத் மல்லவ ஆராச்சி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வியாபார பிரதி அமைச்சர் ஹேமால் குணசேகர பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அகில இலங்கை ரீதியாக தெரிவு செய்யப்பட்ட 150 பேருக்கு சாம ஸ்ரீ விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
இவ் அமைப்பினால் கடந்த இருபத்தொரு வருட காலமாக சேவைகளை மேம்படுத்தும் நோக்குடன் சமய கலை கலாசார ரீதியில் தெரிவு செய்யப்பட்ட புத்தி ஜீவிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
அந்த வகையில் இம்முறை விருது பெற்றவர்களில் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சமூகசேவையாளர் எம்.ஐ.எம்.றியாஸ் அவர்களும் ஒருவராவார்.
முல்லைத்தீவு அல்-ஜெஸீரா வித்தியாலயத்தின் அதிபராகவும், ஊடகவியலாளராகவும், பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவின் பிரத்திய செயலாளராகவும் கடமையாற்றும் எம்.ஐ.எம்.றியாஸ் சாம ஸ்ரீ விருது வழங்கி பாராட்டிக்கௌரவிக்கப்பட்டமை எல்லோரினதும் பாராட்டினைப் பெற்றுள்ளது.
அட்டாளைச்சேனை அல்முனீறா உயர்பாடசாலை, அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி. கல்முனை ஸாஹிறாக் கல்லூரி என்பவற்றின் பழைய மாணவரான இவர் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானத்துறைப் பட்டதாரியுமாவார்.
கல்வியிலும், விளையாட்டுத்துறையிலும் மிகுந்த ஈடுபாடுகொண்ட றியாஸ் பல விளையாட்டுக்கழகங்களில் இணைந்து விளையாடியிருக்க்pன்றார். அத்தோடு நியூஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவராக செயற்படும் இவர் அக்கழகத்தை முன்னணிக்குக் கொண்டு வந்துள்ளார்.
முஹர்ரமாக இளைஞர் கழகத்தின் தலைவராக பல வருடங்களாக செயற்பட்ட றியாஸ் அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவராகவும் இரண்டு வருடங்கள் கடமையாற்றியுள்ளார்.
பின்தங்கிய பிரதேசமான முல்லைத்தீவு கிராமத்தின் பாடசாலையான அல்-ஜெஸீரா வித்தியாலயத்தின் அதிபராக நியமிக்கப்பட்ட றியாஸ் அப்பாடசாலையின் வளர்ச்சிக்காக இரவு பகலாக உழைத்து வருவது குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியதொன்றாகும்.
பொதுச் சேவையில் ஆர்வம் கொண்ட றியாஸ் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் முதன்மையான ஒருவராகக் காணப்படுகின்றார். கோணாவத்தை அந்நூர் மகாவித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் செயலாளராகவும் கடமையாற்றும் இவர் அப்பாடசாலையின் எழுச்சிக்கு தன்னால் இயன்ற பங்களிப்புக்களை வழங்கி வருகின்றார். அத்தோடு கோணாவத்தை ஜூம்ஆப் பள்ளிவாசலின் பொருளாளராகவும் செயற்படுகின்றார்.
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவின் அந்தரங்கச் செயலாளராகவும் கடமை புரியும் எம்.ஐ.எம்.றியாஸ் கடந்த நான்கு வருடங்களாக பல இலட்சம் ரூபா நிதிகளை அட்டாளைச்சேனைப் பிரதேசத்திற்கும் மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களுக்கும் பெற்றுக்கொடுப்பதில் மிகத் தீவிரமாக செயற்பட்டு வெற்றி கண்டுள்ளார்.
பாடசாலைகள், பள்ள்pவாசல்கள், விளையாட்டுக் கழகங்கள்,இளைஞர் அமைப்பக்கள், மகளிர் சங்கங்கள் என்பவற்றிற்கு கூடுதலான நிதிகளைப் பெற்றுக்கொடுத்ததுடன் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுப்பதிலும் முன்னின்று செயற்பட்டுள்ளார்.
தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களிடம் இல்லை என்று கூறாமல் அவர்களுக்கு உதவி செய்து அனுப்புகின்ற ஒரு மனிதராகவும் இவர் விளங்குகின்றார். தான் எடுத்த காரியத்தை எப்படியாவது வெல்ல வைக்க வேண்டும் என்பதற்காக களத்தில் நின்று செயற்படுகின்ற ஒருவராகவும் றியாஸ் அதிபரை நாம் பார்க்கலாம்.
மிக இளம்வயதில் மற்றவர்களுக்கும் உதவி செய்யவேண்டும் என்ற நல்லண்ணத்தைக் கொண்ட றியாஸ் சாம ஸ்ரீ தேகீர்த்தி விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது மிகப்பொருத்தமான சந்தோசமான விடயமாகும்.அது மாத்திரமல்ல பல அமைப்புக்களும் இவரது சேவையைப் பாராட்டிக் கௌரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அட்டாளைச்சேனையின் பிரபல்யமான குடும்பத்தில் பிறந்த றியாஸ் மர்ஹூம்களான டாக்டர் எம்.பி.பி.எம்.இஸ்மாயில், அவ்வா உம்மா ஆகியோரின் புல்வராவார்.
இவரது தந்தை டாக்டர் எம்.பி.பி.எம்.இஸ்மாயில் நாடறிந்த வைத்தியராவார். இவருக்கு இரண்டு சகோதரிகளும், ஒரு சகோதரரும் உள்ளனர். அதுமட்டுமல்ல றியாஸ் திருமணம் செய்து அவருக்கு மூன்று பெண்பிள்ளைகள் இருக்கின்றனர்.
சமூக சேவையில் தடம்பதித்துள்ள எம்.ஐ.எம்.றியாஸ் இன்றும் பல சேவைகளை இந்த சமூகத்திற்காக செய்ய வேண்டும் என பிரார்த்திப்போம்.
0 comments :
Post a Comment