இந்திய அழைப்பிதல் விளையாட்டு நிகழ்வில் 100m, 200m ஓட்டப்போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களையும் 4x100m அஞ்சல் ஓட்டத்தில் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்ட மாகொல முஸ்லிம் அநாதை நிலைய, யதாமா பாடசாலை மாணவன் T.M சகீத் அவர்களை மாணவர்கள், ஆசிரியர்கள் விடுதிக் காப்பாளர்கள் சகிதம் கடந்த வெள்ளிக் கிழமை (24.01.2014) அன்று பாடசாலை முகாமைத்துவச் சபை மற்றும் பாடசாலை நிர்வாகத்தின் ஏற்பாட்டில் அவரது பிறப்பிடமான கெகிராவ பமுனுகமை பிரதேசத்திற்கு அழைத்துச் சென்றோம்.
கெகிராவை ஜூம்ஆ பள்ளிவாசலில் ஜூம்ஆ தொழுகை நிறைவேற்றி விட்டு எமது பஸ்வண்டி சுமார் 12km தொலைவிலுள்ள பமுனுகமை கிராமத்தை நோக்கி புறப்பட்டது. கெகிரவை ஜூம்ஆ பள்ளிவாசலில் இருந்து சுமார் 500m துாரம் பயணிக்கும் போது காத்திருந்தது அந்த இன்ப அதிர்ச்சி.
சுமார் 200 இற்கும் மேற்பட்ட மோட்டர் சைக்கிள்களும் 100 இற்கும் மேற்பட்ட ஏனைய வாகனங்களும் எமது மாணவன் T.M சகீதை வரவேற்பதற்காக அணி திரண்டிருந்தனர். சுமார் 12km துாரம் வரை நெருக்கடியான வாகனப் பேரணியுடன் ஒன்றரை மணித்தியாலத்தின் பின்னர் பமுனுகம கிராமத்தைச் சென்றடைந்தோம்.
பமுனுகமை கிரமத்தில் யதாமா பாடசாலை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது. அந்நாள் எனது வாழ்நாளில் சந்தித்த மிகச் சிறந்த உன்னதான வரவேற்பு அது வார்த்தைகளால் வார்ணிக்க முடியாத வரவேற்பு.
எமது பிரதேசங்களுடன் ஒப்பிடும் போது அடிப்படை வசதிகளில் மிகவும் பின் தங்கிய கிராமம். இந்த சமூகம் இன்னும் மரணிக்கவில்லை உயிருடன் தான் இருக்கிறது என்பதை இன்னுமொரு முறை நிரூபித்தது கெகிராவை பமுனுகமை கிராமம். அவர்களுக்கு அல்லாஹ் றஹ்மத் செய்வானாக.(JM)
0 comments :
Post a Comment