அட்டாளைச்சேனையின் பிரபல கல்விமான் ஜே.எம்.சம்சுதீன் மௌலானா காலமானார்.

-அனாசமி-

ட்டாளைச்சேனை மத்திய கல்லூரி, நிந்தவூர் அல்அஷ்ரக் மகா வித்தியாலயம், காத்தான்குடி மகா வித்தியாலயம், கலாவௌ, புளிச்சான்குளம் போன்ற பாடசாலைகளின் அதிபராகவும் இருந்துள்ளார்.

அதேபோன்று அட்டாளைச்சேனை அறபுக் கல்லூரியின் ஸ்தாபகர்களுள் ஒருவரும், அதில் நீண்டகாலமாக உபதலைவராகவும், அட்டாளைச்சேனை கூட்டுறவுச் சமாஜத்தின் தலைவராகவும், பள்ளிவாசல் பரிபாலன சபையின் தலைவராகவும், குவாஸி நீதிமன்றத்தின் குவாஸியாகவும், கமலநல சேவை மற்றும் அட்டாளைச்சேனையின் பொது அமைப்புக்கள் பலவற்றின் உருவாக்கத்திற்கும் அதன் ஆலோசகராகவும், தலைவராகவும் இருந்து சேவையாற்றி அட்டாளைச்சேனை மண்ணுக்கு பெருமை சேர்த்து தந்தவராவார்.

இவர் அட்டாளைச்சேனையின் வரலாற்றினை தேசிய பத்திரிகைகளில் எழுதி ஊரின் ஆரம்பகால வரலாற்றின் உண்மைகளை சமூதாயத்திற்கு எடுத்தியம்பியவர். 

மார்க்கப்பற்றுமிக்க அறிஞரான இவர் முன்னாள் ஆசிரிய பயிற்சிக் கல்லூரியின் விரிவுரையாளரான காலஞ்சென்ற பிரபல்யமிக்க கல்விமானும், தமிழ் அறிஞருமான ஜே.எம். பதுறுதீன் மௌலானா, முன்னாள் அதிபர் ஜே.எம். நசுறுதீன் மௌலானா ஆகியோரின் சகோதரருமாவார். 

ஒன்பது பிள்ளைகளின் தந்தையான அல்ஹாஜ். ஜே.எம். சம்சுதீன் மௌலானா அவர்கள் இலக்கியவாதியாகவும், பிரபல பேச்சாளராகவும், மார்க்க விடயங்களில் அதீத பற்றுமிக்கவராவும் இருந்து பல்வேறு கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

இவரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று அஸர் தொழுகைக்குப் பின்னர் அட்டாளைச்சேனை பொது மையவாடியில் நடைபெறும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :