அரசு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க கோரி நெல்லையில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

ரசு வேலைவாய்ப்பில் மத்திய அரசு 10 சதவீதமும், மாநில அரசு 7 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்பட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் இன்று நெல்லையில் இன்று சிறைநிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக் கப்பட்டிருந்தது.

அதன்படி, நெல்லை வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் சாலையில் போராட்டம் நடந்தது. இதில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும், கேரளாவில் இருந்து பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்கள் குடும்பத்துடன் திரண்டு வந்து கலந்து கொண்டனர்.

போராட்டத்துக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மேலாண்மை குழு உறுப்பினர் எம்.எஸ்.சுலைமான் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்களான நெல்லை செய்யது அலி, மதுரை முகமது அலி, தேனி பசீர், விருதுநகர் அபுபக்கர், ராமநாதபுரம் சுலைமான், தூத்துக்குடி அப்பாஸ், குமரி அப்துல் சலீம், திருவனந்தபுரம் மண்டலம் ஷாநவாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாண்மை குழு தலைவர் சம்சுல்லுகா கண்டன உரையாற்றினார்.

ஆயிரக்கணக்கான பெண்களும், குழந்தைகளும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

இப்போராட்டம் காரணமாக நெல்லை நகரம் இன்று ஸ்தம்பித்து போனது. போராட்டத்தை முன்னிட்டு நெல்லையில் பஸ் போக்குவரத்து மாற்றி விடப்பட்டிருந்தது. நெல்லையில் இருந்து மதுரை செல்லும் பஸ்கள் அனைத்தும் புது பஸ் நிலையத்தில் இருந்து டக்கம்மாள்புரம், கே.டி.சி. நகர், சங்கர் நகர் வழியாக சென்றது. மதுரையில் இருந்து நெல்லை வந்த பஸ்களும் இதே பாதையில் மாற்றி விடப்பட்டன.

இதுபோல நெல்லைக்கு செல்ல வேண்டிய பஸ்கள் அனைத்தும் மாற்றுப் பாதையில் மாற்றி விடப்பட்டிருந்தது. இதற்காக ஏற்பாடுகளை போலீசார் செய்திருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :