நாட்டு மக்கள் தங்க நகைகளை அதிகமாக அடகுவைக்கும் யுகம் ராஜபக்ஷ யுகமே என்பது இலங்கை வரலாற்றில் பதியப்படும் நிலை இன்றைய அரசாங்கத்தினால் தோற்றுவிக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி எம். பி.யான ரஞ்சித் மத்தும பண்டார சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியால் கொண்டுவரப்பட்ட வாழ்க்கைச் செலவு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்..
ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. இங்கு மேலும் கூறுகையில்,
எத்தனோல் மற்றும் போதைப்பொருள் ஆகிய சட்டவிரோத பொருட்கள் இலங்கைக்குள் கொண்டுவரப்படுவது மற்றும் கடத்தப்படுவது தொடர்பில் அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளனவே தவிர ஐக்கிய தேசிய கட்சியின் மீது எத்தகைய குற்றச்சாட்டுக்கள் எதுவும் கிடையாது.
வாழ்க்கைச்செலவு என்பது பாரிய பிரச்சினையாக உருவெடுத்து இருக்கின்ற இன்றைய காலகட்டத்தில் நாட்டு மக்கள் தம்மிடமிருக்கின்ற தங்க நகைகளை அடகு கடைகளில் அடகுவைக்கின்றனர். நாட்டு மக்கள் தமமிடமுள்ள தங்க நகைகளை அடகுவைக்கும் ஒரு யுகம் இன்றைய ராஜபக்ஷ ஆட்சியின் யுகமேயாகும் என்ற வரலாறு ஒன்று பதிவுவாகும் நிலை உருவாகியிருக்கின்றது.
ஐக்கிய தேசியக்கட்சியைப் பொறுத்தவரையில் நாம் வெ ளிநாடுகளிலிருந்து கடன்களை பெற்றோம். நிவாரண உதவிகளையும் பெற்றோம், அவற்றைக்கொண்டு மகாவலி, கம் உதாவ மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை ஏற்படுத்தினோம். இன்று அரசாங்கம் பெறுகின்ற பாரிய அளவிலான வெ ளிநாட்டு கடன்களை கொண்டு என்னத்தை சாதிக்கின்றது. என்பதுதான் இங்கு இருக்கும் பிரதான கேள்வியாகும்.
இன்று நாட்டிலுள்ள அனைத்து சமூகத்தினரும் பொருளாதார பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அப்படியிருக்கும்போது அரசாங்கத்தினது பொருளாதாரக் கொள்கை எவ்வாறு இருக்கின்றது என்பதை சற்று சிந்தித்துப்பார்க்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவினால் பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்பட்ட இலவச பகல் உணவு திட்டம் இன்று இல்லாமல் செய்யப்பட்டிருக்கின்றது. மறுபுறத்தில் தமது பிள்ளைகளுக்காக பெற்றோர்கள், பாடசாலை தேவைக்கென பெருந்ததொகையான பணத்தை செலவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். என்றார்.
(vk)
0 comments :
Post a Comment