மேல் மற்றும் தென் மாகாண சபை தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகவுள்ளது.
எதிர்வரும் 6 ஆம் திகதி வரை வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் கட்டுப் பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் அடுத்த மாதம் 5 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம் மொஹமட் தெரிவித்துள்ளார்.
வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்படவுள்ளமையினால், அனைத்து மாவட்ட செயலகங்களிற்கு அருகிலுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
இதேவேளை, தேர்தல் ஊர்வலங்கள், பதாதைகள், சுவரொட்டிகள் மற்றும் கட்டவுட்களை காட்சிப்படுத்தல் இன்று முதல் தடை செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தல் சட்டங்களை மீறுபவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இதேவேளை, அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தேர்தல் நடவடிக்கைகளுக்காக பொலிஸ் காவலரண் ஒன்றை இன்று முதல் நிறுவவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
அனைத்து பொலிஸ் பிரிவுகளிளும், பொலிஸ் தலைமையகங்களிலும் தேர்தல் நடவடிக்கை பிரிவுகளை நிறுவவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :
Post a Comment