காத்தான்குடி கழிவுகளை உக்கக் கூடிய கழிவுகள்,உக்க முடியாத கழிவுகள் என வேறு பிரித்து கழிவு சேகரிப்பு

பழுலுல்லாஹ் பர்ஹான்-

ட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடிப் பிரதேசத்தில் மிக நீண்டகால சவாலான திண்மக்கழிவகற்றல் பிரச்சினைக்கு நிரந்தர திர்வு காண்பதற்காக கழிவு சேகரிப்பு சேவை தொடர்பில் காத்தான்குடி நகர சபையினால் புதிய ஒழுங்குகள் தீர்மானிக்கப்பட்டுவருவதாக காத்தான்குடி நகர சபைத தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் காத்தான்குடி பிரதேசத்தில் சேரும் கழிவுகளை உக்கக் கூடிய கழிவுகள்,உக்க முடியாத கழிவுகள் என வேறு பிரித்து கழிவு சேகரிப்பு சேவையினை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் இச் சேவைக்கு ஐரோப்பிய யூனியனின் மேலதிக நிதியுதவியுடன் இயங்கும் யுனெப்ஸ் நிறுவனத்தின் ஊடாக இத்திட்டங்களை அமுல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவம் இச் செயற்திட்டத்தின் ஊடாக காத்தான்குடி பிரதேசத்தின் திண்மக்கழிவகற்றல் பிரச்சினைக்கு நிரந்தர திர்வு காண்பதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாதது எனவும் குறிப்பிட்ட அவர் இச் செயற்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

கழிவு சேகரிப்பு விடயம் தொடர்பில் காத்தான்குடி நகர சபையினால் புதிய கழிவு சேகரிப்பு சேவைகள் எனும் தலைப்பில் ஒரு துண்டப்பிரசுரம் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள வீட்டு உரிமையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்ட்டுள்ளதாகவும் உக்கக் கூடிய கழிவுகள்,உக்க முடியாத கழிவுகள் சேகரிப்பு தினங்கள் பற்றிய அட்டவனையும் அதில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கும் ,முறைப்பாடுகளுக்கும் 0652245925 என்ற இலக்கத்திற்கு அழைப்புக்களை ஏற்படுத்துமாறும் காத்தான்குடி நகர சபையின் செயலாளர் ஜெ.சர்வேஸ்வரன் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :