ஹசிப் யாஸீன்,எஸ்.அஷ்ரப்கான்
அம்பாறை மாவட்டத்தில் விளையாட்டுத்துறைக்கான போதிய வளங்களும் வசதிகளுமற்ற நிலையில் தனது முயற்சியினால் தங்கப் பதக்கம் வென்று தாய் நாட்டிற்கும் நான் பிரதிநிதிப்படுத்தும் திகாமடுல்ல மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த ஏ.எல்.எம்.அஷ்ரஃப்பிற்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களைiயும் தெரிவிப்பதுடன், அவரது விளையாட்டுத்துறை முன்னேற்றத்திற்கு உதவப்போவதாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத்தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்தியாவின் கோவாவில் நடைபெற்ற லுசிபோனியா விளையாட்டுப் போட்டியில் மெய்வல்லுனர் நிகழ்ச்சியில் 4ஓ100 மீற்றர் அஞ்சல் ஓட்டக் குழுவில் பங்குபற்றி தங்கப் பதக்கம் வென்ற அம்பாரை மாவட்டம் பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஏ.எல்.எம்.அஷ்ரஃப் கிழக்கு மாகாணத்திற்குப் பெருமை சேர்த்துள்ளதுடன் அவரது பொத்துவில் மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
உண்மையில் விளையாட்டுத்துறையில் பாரிய தேவைகள் எதிர்பார்ப்புக்களுடன் உள்ள அம்பாரை மாவட்டத்தில் போதிய வளங்களுடன் ஒரு மைதானம்கூட இல்லாத நிலையில் தேசிய ரீதியில் புகழ் பெறுமளவிற்கு அஷ்ரஃப் திறமையை வெளிக்காட்டியிருப்பது மெச்சத்தக்கதாகும். அம்பாறை மாவட்டத்தின் வரலாற்றில் சர்வதேச போட்டியில் ஒருவர் பங்குபற்றிதும், தக்கப் பதக்கம் பெற்றதும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
இதன் மூலம் ஏனையவர்களும் இவ்வாறான தேசிய மட்ட, சர்வதேச மட்ட போட்டியில் பங்குபற்ற வேண்டும் என்ற ஆர்வத்தை அஷ்ரஃப் எமது மாவட்ட விளையாட்டு வீரர்கள் மத்தியில் விதைத்து விட்டார். எதிர்காலத்தில் எமது பிரதேச விளையாட்டு வீரர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கு இம்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் என்னாலான சகல முயற்சிகளையும் மேற்கொள்ளவுள்ளேன்.
இவ்விடத்தில் அஷ்ரஃபின் பெற்றோர்களை மறந்துவிட முடியாது. பொதுவாக பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் கல்வியில் முன்னேற வேண்டும், சாதிக்க வேண்டும் என்றே என்ணுவார்கள். ஆனால் இவரின் பெற்றோர்கள் இவரின் விளையாட்டு திறமைக்கு தடைபோடாமல் முக்கியத்துவமளித்து இந்தளவுக்கு சாதிப்பதற்கு உறுதுணையாக இருந்த அவரின் பெற்றோர்களையும் பாராட்டுகின்றேன்.
பாடசாலை மட்டத்திலிருந்து மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கு ஆசிரியர்கள் முதற்கொண்டு விளையாட்டுத்துறைசார் உத்தியோகத்தர்களும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். இன்று பொத்துவிலைச் சேர்ந்த அஷ்ரஃப் போன்று எமது அம்பாரை மாவட்டத்தில் பல வீரர்கள் தேசிய மட்டத்திற்கு தெரிவாக வேண்டும்.

இதற்காக பல்வேறு சமூகத்தரப்பினரும் உதவ முன்வர வேண்டும். அதனுடாக எதிர்காலத்தில் எமது பிரதேசத்தை தேசிய ரீதியில் பிரபல்யமிக்கதாக மிளிரவைக்க முடியும்.
இவரின் இச்சாதனையினை திதுலன திகாமடுல்ல நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக அவரது சொந்த மண்ணில் வைத்து பாராட்டி கௌரவிக்கவுள்ளேன் எனவும் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment