நிந்தவூர் தொழிற்பயிற்சி நிலையத்தை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல நாசகாரர்கள் நடவடிக்கை - றிஸான்

பழுலுல்லாஹ் பர்ஹான்-

நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல சில நாசகாரர்கள் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றார்கள். இதற்கு ஒருபோதும் நாம் ஒத்துழைப்பு வழங்க முடியாது இந்த விடயத்தில் இளைஞர் சமூகம் எனக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் இல்லாவிட்டால் எனது பதவியினை இராஜினாமா செய்து சாதாரண இளைஞனாக வீடு திரும்பவும் நான் தயார் என இளைஞர் பாராளுமன்ற சகவாழ்வு பிரதி அமைச்சர் றிஸான் தெரிவித்தார்.

சாய்ந்தமருது பிரதேசத்தின் இளைஞர் கழகங்களை 2014ம் ஆண்டுக்கான பதிவு செய்தவற்கான கூட்டம் 26.01.2014 நேற்று ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் பிற்பகல் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட சகவாழ்வு பிரதி அமைச்சரும், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். றிஸான் உரையாற்றுகையில்....

'நிந்தவூர் பிரதேசத்தின் அமைந்துள்ள மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றார்கள். இதற்கு ஒருபோதும் நாம் ஒத்துழைப்பு வழங்க முடியாது' என வேண்டுகோள் விடுத்தார். 

மேலும் தொடர்ந்து உரையாற்றுகையில் மர்ஹூம் மாமனிதர் எம்.எச்.எம். அஷ்ரப் கிழக்கு மாகாண சிறுபான்மையினரின் கல்வி வளர்ச்சிக்கு இரண்டு திட்டங்களை நெறிப்படுத்தி வெற்றிகண்டார். முதலாவது திட்டம் தென்கிழக்கு பல்கலைக்கழகம் இரண்டாவது பல்கலைக்கழக நுழைவு கிடைக்காத மாணவர்களுக்கு நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தை உருவாக்கினார். 

இத்திட்டம் மாபெரும் வெற்றிகண்டு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இச்சந்தர்ப்பத்தில் சில நாசகாரர்கள் இவ் நிந்தவூர் தொழிற்பயிற்சி நிலையத்தை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல உள்ளார்கள்.

பெப்ரவரி மாதம் 24 ஆந் திகதி இளைஞர் பாராளுமன்றத்தின் 6வது அமர்வு நடைபெறவுள்ளது. இப்பாரளுமன்றத்தில் சபாநாகர் அனுமதியுடன், அம்;பாரை மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்புடனும் இவ்விடமாற்றத்தை இரத்துச் செய்ய இளைஞர் திறன் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ டலஸ் அழகப்பெருமாள் அவர்களிடம் மகஜர் ஒன்றை வழங்கவுள்ளோன்.

 இதற்கு உடனடியாக தீர்வொன்றை வழங்க வேண்டும் அவ்வாறு நடாக்காத பட்சத்தில் அவ்விடத்தில் எனது சகவாழ்வு பிரதி அமைச்சர் பதவியினையும், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினையும் இராஜினாமா செய்துவிட்டு சாதாரண இளைஞனாக வீடு திரும்புவேன், இது நிந்தவூ பிரதேச இளைஞர்களின் பிரச்சினை மட்டுமல்ல ஒட்டுமொத்த கிழக்கு மாகாண சிறுபான்மை இளைஞர்களின் பிரச்சினை, இதற்கு நாம் உடனடியாக தீர்வினைப் பெறவேண்டும். எமது சமூகத்திலுள்ள அரசியல் வாதிகளில் சிலர் கல்வி நிலையத்தினை உருவாக்க சிந்திக்காத இச்சந்தர்ப்பத்தில் மர்ஹூம் மாமனிதர் அஸ்ரப் அவர்கினால் உருவாக்கப்பட்ட இந் நிந்தவூர் தொழிபயிற்சி நிலையத்தை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல நாம் எவ்வாறு பொறுமையாகவும், நிதானத் தன்மையுடனும் நடப்பது. 

எனவே, எனக்கு பல போராட்டங்களுக்கு மத்தியில் வாக்களித்த இளைஞர் சமூகம் எனது பதவி திறப்பதற்கும் ஆணை வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையுடன் நாம் இப்பிரச்சினைக்கு தீர்வைப்பெற முனைப்புடன் செயற்படவுள்ளேன்' என்று தனது உரையை முடித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :