பழுலுல்லாஹ் பர்ஹான்-
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அயராத முயற்சியின் பயனாக இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதி மேன்மை தங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஷேட வேலைத் திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சின்; சுமார் 70 இலட்சம் ரூபாய் செலவில் காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்ட நூலக மேல்மாடி கட்டட திறப்பு விழா 27-01-2014 இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.
காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலை அதிபர் எம்.சி.எம்.எ.சத்தார் தலைமையில் இடம்பெற்ற இத் திறப்பு விழாவில் பொருளாதார அபிபிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இதன் போது பிரதம அதிதியினால் குறித்த கட்டிடத்திற்கான நாடா வெட்டி வைக்கப்பட்டதுடன் நினைவுக் கல்லும் தீரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்,காத்தான்குடி நகர சபைத தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர்,மட்டக்களப்பு மத்தி கல்வி வலய முகாமைத்துவ பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.இஸ்மாலெப்பை, மட்டக்களப்பு மத்தி கல்வி வலய ஆரம்பக் கல்வி உதவிக் கல்வி பணிப்பாளர் ஐ.எம்.இப்றாஹீம் உட்பட உதவி அதிபர்கள்,ஆசிரிய ஆசிரியைகள் ,ஊடகவியலாளர்கள் ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment