காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் மருந்துகள் தட்டுப்பாடு – நோயாளர்கள் விசனம்.



காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் கடந்த சிலநாட்களாக நிலவுகின்ற மருந்துகள் தட்டுப்பாட்டின் காரணமாக பொதுமக்கள் பெரிதும் அல்லலுறுவதை அவதானிக்கக்கூடியதாவுள்ளது.

தற்போது நாட்டில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள சீதோஷ்ண நிலையில் மழை மற்றும் மாலை நேரப் பனி மூட்டத்தின் காரணமாக குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற காய்ச்சல், தடிமன் போன்ற நோய்களுக்காக சிகிச்சை பெற வருகின்ற தாய்மார்களுக்கு வைத்தியசாலையில் கடமை புரிகின்ற வைத்தியர்களால் வெறுமனே மருந்துகள் எழுதப்பட்ட துண்டுச்சீட்டுக்கள் மாத்திரமே கொடுக்கப்படுவதாகவும்

அம்மருந்துகளை வெளியில் உள்ள தனியார் மருந்தகங்களில் பெற்றுக்கொள்வதற்காக சுமார் ஐநூறு ரூபாவிற்கு மேலாக செலவிட வேண்டிய கஷ்டமான நிலையினை தாங்கள் எதிர்நோக்குவதாகவும் அதிகளவான நோயாளர்கள் மற்றும் சிறு குழந்தைகளின் தாய்மார்கள் அங்கலாய்ப்பதனை அன்றாடம் காணக்கூடியதாகவுள்ளது.

வாழ்வாதார மற்றும் மருத்துவச் செலவுகள் சாதாரண வருமானத்தை ஈட்டுகின்ற, வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களின் வாழ்வில் பாரிய சுமையாகத் தாக்கம் செலுத்துகின்ற இக்கால சூழ்நிலையில் குறைந்த பட்சம் குழந்தைகளின் நோய்களுக்கான பனடோல் சிரப், இருமல், சளி போன்றவற்றுக்கான பாணி மருந்துகளுக்குக் கூட காத்தான்குடி நகரின் ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள இப்பஞ்சநிலை பிரதேசத்திலுள்ள அநேகமான மக்களின் விசனத்தையும் ஆழ்ந்த அங்கலாய்ப்பையுமே வெளிக்கொணர்ந்துள்ளது என்பதை மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரிகள் சற்று சீர்தூக்கிப் பார்க்கக் கடமைக்கபட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :