அடிப்படை வசதிகள் இன்றி வாழும் மக்களை யோகேஸ்வரன் நேரடியாக சென்று பார்வையிட்டார்.

ந.குகதர்சன்-

செங்கலடி கித்தூள்வௌ குளிர்ந்த சோலை கிராமத்தில் வீடு வசதி உட்பட்ட அடிப்படை வசதிகள் இன்றி வாழும் மக்களை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் நேற்று திங்கட்கிழமை நேரடியாக சென்று பார்வையிட்டார்.

அண்மையில் அன்றாட இருப்பிடத்திற்கு கஷ்ரப்பட்டுக் கொண்டிருக்கும் கிராமமாக ஊடகங்களில் வெளிவந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேசத்தின் கித்துள்வௌ என்னும் கிராமத்திற்கு சென்று அங்குள்ள மக்களை பாராளுமன்ற உறுப்பினர் சந்தித்தார்.

இங்கு 17 குடும்பங்கள் அன்றாட இருப்பிடத்துக்கும், வசதியற்ற நிலையில் வாழ்கின்றனர். கடந்த காலத்தில் நடைபெற்ற யுத்த சூழலின் படுவான்கரை எனப்படும் இப்பிரதேச பகுதி முற்றாக பாதிக்கப்பட்டன. இப்பகுதி மக்கள் 2006ம் ஆண்டு இறுதி தொடக்கம் 2007ம் ஆண்டு முற்பகுதி வரை இடம்பெயர்ந்து பின் மீள்குடியேற்றப்பட்டனர்.

ஆனால் இவர்களுக்கு அரசாங்கம் வீடு, குடிநீர் உட்பட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள தவறிவிட்டது. இன்றும் இம்மக்கள் பல கஷ்ரங்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருகின்றனர். கித்துள்வௌ என்னும் கிராமத்தின் வடிச்சல் பகுதியில் உள்ள ஐந்து குடும்பங்களின் நிலைகளையும் நேரடியாக சென்று பாராளுமன்ற உறுப்பினர் பார்வையிட்டதுடன், அப்பகுதி பாடசாலைக்கும் சென்று கல்வி உபகரணங்களை வழங்கி வைத்தார்.

இங்கு வசிக்கும் ஐந்து குடும்பங்களுக்கு லண்டன் சிவனருள் இல்லம் வீடு வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கருத்து தெரிவித்துள்ளார். இக்கிராம மக்களின் குறைபாடு, பாடசாலை மாணவர்கள் குறைபாடு, கிராம குறைபாடு என்பவற்றை நேரடியாக மக்களை சந்தித்து கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர் சில குறைபாடுகளை நிவர்த்தி செய்ய உடன் நடவடிக்கை எடுப்பதாகவும் மக்களிடம் தெரிவித்துள்ளார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :