வரவு- செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட தவிசாளர்களை நீக்க வேண்டாம் – உயர்நீதிமன்றம்

ரவு- செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட 8 பிரதேச சபைகளுக்கு புதிய தவிசாளர்களை நியமிக்கவோ நீக்கவோ வேண்டாமென உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட எட்டு பிரதேச சபைகளின் தவிசாளர்கள் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டபோதே உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது..

உயர்நீதிமன்ற நீதியரசர்களான சந்ரா ஏக்கநாயக்க, சத்தியா ஹெட்டிகே, ரோஹினி மாரசிங்ஹ ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது மாத்தறை, கெஸ்பேவ மற்றும் புளத்சிங்கள ஆகிய பிரதேச சபைகளுக்காக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தவிசாளர்கள் எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி வரை குறித்த பிரதேச சபைகளின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

ஹோமாகம பிரதேச சபையின் தவிசாளர் தொடர்ந்தும் அந்தப் பதவியில் செயற்படுவதற்கு இதற்கு முன்னர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதால், அவர் தொடர்ந்தும் அந்தப் பதவியில் நீடிப்பதற்கு நீதமன்றம் அனுமதியளித்தள்ளது.

ஹிங்குராக்கொட, இம்புல்பே. தமண மற்றும் ஹங்குராங்கெத்தை ஆகிய பிரதேச சபைகளின் வரவு செலவுத்திட்டங்கள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் அந்த பிரதேச சபைகளின் நடவடிக்கைகள் இதுவரைக் காலமும் முன்னெடுக்கப்பட்ட முறைமை தொடர்ந்தும் பின்பற்றப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த அனைத்து அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :