பசுத்தோல் போர்த்திய “புலியாக” இருந்த விக்னேஸ்வரன் பிரிவினைவாத புலியாக இருக்கிறார் - குணதாச

நீதித்துறையில் இருக்கும் போது பசுத்தோல் போர்த்திய “புலியாக” செயற்பட்ட விக்னேஸ்வரன் இன்று முதலமைச்சரானதும் பசுத்தோலை வீசியெறிந்து விட்டு தான் பிரிவினைவாத புலியென்பதை நிரூபித்துக் கொண்டுள்ளார் என குற்றம் சாட்டும் தர்மபால பரம்பரா அமைப்பின் ஏற்பாட்டாளர் டாக்டர் குணதாச அமர சேகர இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல என்ற கருத்தை வெளியிட்டுள்ள விக்னேஸ்வரன் தனித்தமிழ் ஈழத்திற்கான பயணத்தை ஆரம்பித்து விட்டார் என்றும் அவர் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற இவ் அமைப்பின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அதன் ஏற்பாட்டாளரும் தேசப்பற்றுள்ள தேசிய அமைப்பின் தலைவருமான டாக்டர் குணதாச அமரசேகர இங்கு மேலும் உரையாற்றுகையில்

இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல. எனவே வரலாற்றை புதிதாக எழுத வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதற்கு இலங்கையில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொள்ளும் சர்வதேச தேசிய அரச சார்பற்ற நிறுவனங்கள் விக்னேஸ்வரனுக்கு உதவிபுரிய ஆரம்பித்து விட்டது.

இதற்காக இந்த நாடு சிங்கள பௌத்த நாடல்ல பல்லினங்கள் வாழும் நாடு என்ற வரலாற்றை எழுத அரச சார்பற்ற சக்திகள் ஆரம்பித்து விட்டன.

இது கால வரையும் ஈழராஜ்ஜியத்தை ஆதரித்தவர் விக்னேஸ்வரன்.

அன்று நீதித்துறையில் இருக்கும் போது பசுத் தோல் போத்திய புலியாக இருந்தார்.

ஆனால் இன்று முதலைச்சரானதும் பசுத்தோலை வீசியெறிந்துவிட்டு தனது உண்மையான புலி சுயரூபத்தை வெளிப்படுத்தியுள்ளதோடு அதற்கான திட்டங்களையும் முன்னகர்த்திக் கொண்டிருக்கிறார்.

அசோக சக்கரவரத்தி காலம் தொடக்கம் 2000 ஆண்டுகளையும் தாண்டி இலங்கையில் பௌத்த தர்மம் உள்ளது.

இதனை மாற்றி எழுதி சிங்கள பௌத்த கலாசாரத்தை அழித்து எதிர்கால சந்ததியினரின் மூளையை சலவை செய்து நாட்டை அழிக்கும் திட்டம் நடைபெறுகிறது.இது பிரபாகரனின் பயங்கரவாதத்தை விட பயங்கரமானது.

எனவே இத்திட்டத்தை தோல்வியடையச் செய்ய வேண்டும் என்றும் டாக்டர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.(vk)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :