இலங்கைப் போர்க்குற்றங்கள் விசாரணை தேவை - வட மாகாண சபை தீர்மானம்

லங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை என்றும் இதனை சர்வதேச விசாரணையின் மூலம் அனைத்துலக சமூகம் வெளிப்படுத்த முன்வர வேண்டும் இலங்கையின் வடமாகாண சபை கோரியிருக்கிறது.

திங்கட்கிழமை நடந்த இலங்கை வட மாகாண சபைக் கூட்டத்தில் இது குறித்து தீர்மானம் ஒன்றை சபை நிறைவேற்றியிருக்கிறது.

இலங்கையில் நடைபெற்று முடிந்த படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கு இலங்கை அரசின் உள்நாட்டுப் பொறிமுறையை

நிராகரிக்கின்ற அதேவேளை சர்வதேச சமூகத்தின் பங்களிப்பின்றி நீதியோ அல்லது அரசியல் தீர்வோ கிட்டும் என்பதிலும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

தமிழ்ச் சமூகத்திற்கு எதிராக இலங்கையில் இழைக்கப்பட்டுள்ள போர்க்குற்றங்கள் மானிடத்திற்கு எதிரான குற்றங்கள், இனச் சுத்திகரிப்பு, இனப்படுகொலைக்கு ஒப்பானது என்று சொல்லப்படும் மனிதப்படுகொலைகளை விசாரணை செய்வதற்காக பக்கசார்பற்ற பன்னாட்டு விசாரணையை ஐநாவின் துணையுடன் உருவாக்க வேண்டும் என்று அனைத்துலக சமூகத்தைக் கோருவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த மூன்று பிரேரணகளும் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் முன்மொழியப்பட்டபோது, எதிர்க்கட்சியினர் இதனை எதிர்த்து தமது எதிர்ப்பைப் பதிவு செய்வதாகக் கூறினர்.
அதனையடுத்து இந்தப் பிரேரணைகள் சபையில் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக உறுப்பினர் சிவாஜிலிங்கம் பிபிசியிடம் தெரிவித்தார்.

'மன்னார் மனிதப் புதைகுழிகள் பற்றியும் சர்வதேச விசாரணை தேவை'
இதேவேளை இறுதி யுத்தத்தின்போது வன்னியில் இருந்த பொதுமக்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் முள்ளிவாய்க்காலில் காணாமல் போயிருப்பது அரச அதிகாரிகள் சமர்ப்பித்திருந்த மக்கள் கணக்கெடுப்பு மூலம் தெரியவந்திருப்பதைச் சுட்டிக்காட்டி இது தொடர்பான சரியான ஒரு கணக்கெடுப்பை சர்வதேச சமூகத்தின் உதவியோடு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கொண்டு வந்த தீர்மானமும் சபையினால் எற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
அத்துடன் மன்னார் திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி தொடர்பான ஆய்வுகளை சர்வதேசத்தின் மேற்பார்வையில் மேற்கொள்ள வேண்டும் என்ற அவருடைய தீர்மானமும் பிரேரணையாக மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருக்கேதீஸ்வரம் மனிதப்புதைகுழி தொடர்பாகச் செயற்பட்டு வருகின்ற அனுராதபுரம் சட்ட வைத்திய நிபுணரே, மூதூரில், ஆக்ஷன் பாம் ( ACF) என்ற சர்வதேச தொண்டு நிறுவனப் பணியாளர்களின் கொலைகள் தொடர்பில் செயற்பட்டிருந்தார்.

எனினும் அவருடைய செயற்பாட்டின் மூலம் அந்தக் கொலைகளுக்கு நியாயம் கிடைக்காத காரணத்தினால், திருக்கேதீஸ்வரம் மனிதப்புதைகுழி விவகாரத்திலும் நியாயம் கிடைப்பது சந்தேகத்திற்கு இடமானது என்ற காரணத்தினாலேயே சர்வதேசத்தின் மேற்பார்வையில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனற தீர்மானத்தைத் தான் கொண்டு வந்ததாக அனந்தி சசிதரன் கூறுகின்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :