சலீம் ரமீஸ்-
பொத்துவில் அல்-இஸ்றக் வித்தியாலய அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம்.றபீக் தலைமையில் பொத்துவில் சண்டி பீச் ஹோட்டலில் இடம் பெற்றது.
இதில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம் ,வீடமைப்பும் நிர்மாணமும்,கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்கள் உட்பட பிரதேச சபை உறுப்பினரும், உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவின் பொத்துவில் பிரதேச இணைப்பாளருமான ஏ.பதுர்கான், பொத்துவில் கோட்டக்கல்வி அதிகாரி ஏ.அஸ், முன்னாள் கோட்டக் கல்வி அதிகாரி எம்.எல்.எம்.ஏ.காதர் உட்பட முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment