ஜில்லாவுக்காக யாழ்பாணத்தில் போராட்டம் - ரசிகர்களுக்கு புத்திமதி கூறி அனுப்பிய அமைச்சர்

டிகர் விஜய் நடித்து வெளிவந்த ஜில்லா படத்தின் விமர்சனம் இலங்கையில் உள்ள உதயன் நாளிதழின் ஞாயிறு இணைப்பான சூரியகாந்தியில் வெளிவந்தது. 

அதில் "இந்தத் திரைப்படத்தைப் பார்க்க திரையரங்குக்குப் போய் மூன்று மணி நேரத்தை வீணடிப்பது கொழுப்பு அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?" என்று எழுதப்பட்டிருந்தது.

இந்த விமர்சனத்தை எதிர்த்து யாழ்பாணத்தில் உள்ள உதயன் அலுவலகம் முன்பு, 14 இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டார்கள்.

அப்போது அங்கு வந்த வட மாகாண சபை அமைச்சர் ஐங்கர நேசன், போராட்டத்தில் ஈடுப்பட்ட இளைஞர்களை பார்த்து, " நீங்கள் எல்லாம் தமிழர்கள் தானே .. இங்குள்ள தமிழர்கள் உறவுகளைக் காணவில்லை என்று அழுது புலம்புகின்றனர். 

ஜெனிவாவில் தீர்மானம் கொண்டு வருகிறார்கள். அதற்கெல்லாம் போராடாமல் ஒரு நடிகருக்காக இப்படி நிற்கிறீர்களே? அதுவும் ஒரு பத்திரிகை விமர்சனம் எழுதியதற்காக போராட வந்திருக்கிறீர்களே? ", என்று கடுமையாக பேசி அவர்களின் போராட்டத்தை கை விடும் வரை ஆலோசனை கூறி அவர்களை அனுப்பிவைத்தார் 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :