பெத்தம்மா திரைப்பட வெளியீடும் : சவால் பாடல் வெளியீட்டு விழாவும் - படங்கள், வீடியோ இணைப்பு



பிறவ்ஸ் முஹம்மட்
பெத்தம்மா திரைப்பட வெளியீடும் சவால் பாடல் வெளியீடும் எதிர்வரும் 02.02.2014 (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 4 மணிக்கு துருவம் ஊடக வலையமைப்பினால் கொழும்புஇ தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளதாக அதன் தலைவர் பிறவ்ஸ் தெரிவித்தார்.

உலகத் தமிழ் அறிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீத் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் இலங்கையிலுள்ள திரைப்படத்துறை சார்ந்த கலைஞர்கள்இ அரசியல்வாதிகள்இ ஊடகத்துறை சார்ந்தவர்கள் மற்றும் புத்திஜீவிகள் என பலரும் கலந்துகொள்ளனர்.

இந்நிகழ்வில் முன்னிலை அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் நவமணி பத்திரியிகையின் பிரதம ஆசிரியருமான என்.எம். அமீன் கலந்துகொள்வார். பிரதம அதிதியாக முதலீட்டு, ஊக்குவிப்பு பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபாவும், கெளரவ அதிதிகளாக மத்திய மாகாணசபை உறுப்பினரும்இ தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் அஸாத் சாலி, மேல் மாகாணசபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், கல்முனை மாநகரசபை பிரதி மேயர் ஸிராஸ் மீராசாஹிப் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர். மேலும் விசேட அதிகளாக பல அரசியல் பிரமுகர்களும், திரைப்படத்துறை சார்ந்தவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.


இந்நிகழ்வில் பெத்தம்மா திரைப்படம் பற்றிய அறிகமுவுரையை அதன் நடிகர் எம்.ஏ.சி. சர்மில் நிகழ்த்துவார். அபோன்று சவால் திரைப்படம் பற்றிய அறிமுகவுவரையை அதன் இயக்குநரும், துருவம் ஊடக வலையமைப்பின் தலைவருமான பிறவஸ் நிகழ்த்துவார். பெத்தம்மா திரைப்படத்தின் முதற்பிரதியை ஒலிபரப்பாளர்இ மானுட நேயன் இர்ஷாத் ஏ. காதரும், சவால் பாடலின் முதற்பிரதியை றோயல் பெயின்ட் நிறுவனத்தின் ஆலோசகர் ஷான் முஹம்மட் பெற்றுக்கொள்வார்.


அத்துடன், பாடகர்களான முஹம்மட் இர்பான், சமீரா ஹஸன், சப்னாஸ், ஜெரால்ட், சின்மயி,ஷிப்னான் ஆகியோர் பாடல்களும் இடம்பெறும். இந்நிகழ்வுக்கு கலைத்துறை சார்ந்த அனைத்து கலைஞர்களையும் துருவும் ஊடக வலையமைப்பு அன்புடன் அழைக்கிறது.

பெத்தம்மா திரைப்படம் அறிமுகம்



ஆழிப் பேரலைக்குப் பின்னரான மக்களின் உளவியல் மாற்றங்களை சித்தரிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட ஆவணத் திரைப்படமே பெத்தம்மா. கிழக்கிலங்கையில் ஆழிப்பேரலை ஏற்படுத்திய அழியமுடியாத வடுக்கள் இத்திரைப்படத்தில் தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் இத்திரைப்படத்தில் இரண்டு பாடல்களும் இடம்பெற்றுள்ளன.


திரைப்பட இயக்குநரும், அறிவிப்பாளரும், கவிஞரும் துருவம் ஊடக வலையமைப்பின் செயலாளருமான எஸ்.ஜனூஸின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தை SGA Films நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தில் நவரச நாயகன் ஷர்மில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருன் இணைந்து பதுறுதீன்,கிஷோர், பிரியதர்ஷினி, நேந்தம்பி மற்றும் நேத்ரா ரி.வி. நிகழ்ச்சித் தொகுப்பாளர் அன்ஸஹான் உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு - ஷாஹிர், பாடல் வரிகள் - எஸ்.ஜனூஸ், இசை - யூ.ஜே.நஸார், பாடகர்கள் - ஷாஹிர் மற்றும் ஷிப்னாஸ்,எடிட்டிங் - ஜெஸ்லி ஷர்மில்



சுனாமிக்கு நிவாரணம் மூலம் முற்றுப்புள்ளி வைக்கமால்,பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் ரீதியான மாற்றங்களும் அவசியம் என்பதை இத்திரைப்படம் சுட்டிக்காட்டி நிற்கிறது. இத்திரைப்படம் கல்முனை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

சவால் திரைப்படம் அறிமுகம்


நவீன மயப்படுத்தப்பட்டுள்ள தற்காலத்தின் சில யதார்த்தங்களை புடம்போட்டுக் காட்டும் படமே சவால். இப்படத்தில் பேஸ்புக் பற்றிய ஒரு காதல் பாடலும் இடம்பெறுகிறது. பேஸ்புக் நட்பு மற்றும் காதல் இரண்டுக்குமான போராட்டத்தை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் தயாரிக்கப்படுகிறது. துருவம் ஊடக வலையமைப்பின் தலைவரும், பத்திரிகையாளருமான பிறவ்ஸ் இயக்கத்தில் வெளிவரவுள்ள இத்திரைப்படத்தை அல்டிமேட் புரடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. துருவம் ஊடக வலையமைப்பு இதனை வெளிடுகின்றது.


இப்படத்தில் அஸ்ஜயீன்,பிறவ்ஸ், மசூன், டிலுஷா, சிந்துஜா ஆகியோர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்புகள் தற்போது கொழும்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதில் முகநூலே... முகநூலே... என்ற பாடல் ஒன்றும் இடம்பெறுகிறது. பாடல் வரிகள் - ஜனூஸ், பாடியவர்கள் - ஷப்னாஸ் மற்றும் ஜெகனிஇ இசை - மதீஸன், இசைக்கோர்ப்பு - சத்யன், ஒலிப்பதிவு - ஏசியன் செந்தூரன்இ ஸ்ரூடியோ - யாழ். சப்தமி ஸ்ரூடியோஇ ஒளிப்பதிவு - அஸீஸ் அஸ்வர்,கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - பிறவ்ஸ்


சவால் குறும்படத்திலுள்ள அனைத்து கலைஞர்களும் புதுமுகம், அறிமுகம்இ இளவட்டங்கள். பல பிரயத்தனங்களுக்கு மத்தியில் இதன் பாடல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலுக்கு உள்ளூர் மற்றும் சர்வதேச வானொலிகள் முழுமையான ஆதரவு தரவேண்டும்.

இலங்கையில் ஏதாவது பாடல்கள் வெளிவந்தால், அதை இந்திய தயாரிப்புகளுடன் ஒப்பிட்டு புறக்கணிக்கும் பழக்கம் நெடுங்காலமாக இருந்து வருகின்றது. இந்நிலைமை மாறவேண்டும். வளரும் கலைஞர்களுக்கு ஊடகங்கள் தங்களாலான முழுமையான ஆதரவினையும் வழங்கவேண்டுமென சவால் படக்குழு வேண்டி நிற்கின்றது.

முகநூலே பாடல் விரைவில் வானொலிகளில் ஒலிக்கும். அதேபோன்று சவால் இக்குறும்படமும் தொலைக்காட்சிகளில் விரைவில் ஒளிப்பரப்பாகும் என்ற நல்ல செய்தியையும் வாசகர்களுக்கு தெரியப்படுத்துவதில் படக்குழு மகிழ்ச்சியடைகிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :