கலைஞர் ஊடகர் டேவிட் ராஜேந்திரன் அவர்களுக்கு மரியாதை

லைஞர் ஊடகர் டேவிட் ராஜேந்திரன் அவர்களுக்கு மரியாதை வணக்கம் : பிரபல ஒலிபரப்பாளர் பி. எச். அப்துல் ஹமீத் அவர்களும் பங்கெடுப்பு !

மறைந்த ஈழத்தின் பிரபல நாடகக் கலைஞரும் ஊடகத்துறையாளருமான டேவிட் ராஜேந்திரன் அவர்களுக்கான வணக்க நிகழ்வொன்று பிரான்சில் இடம்பெற்றுள்ளது.

டேவிட ராஜேந்திரன் அவர்களுடன் ரீரீஎன் தொலைக்காட்சியில் இணைந்து பணியாற்றிய கலைஞர்கள், அன்னாருக்கான மரியாதை வணக்கத்தினை தெரிவித்திருந்ததோடு அவர் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

பிறிதொரு நிகழ்வுக்கான பிரான்சுக்கு வருகை தந்திருந்த பிரபல ஒலிபரப்பாளர் பி. எச். அப்துல் ஹமீத் அவர்களும் இந்த வணக்க நிகழ்வில் பங்கெடுத்து, டேவிட் ராஜேந்திரன் அவர்கள் பற்றிய நினைவுரையினை வணங்கி தனது மரியாதை வணக்கத்தினை தெரிவித்திருந்தார்.

உறவினர்கள், நண்பர்கள், கலைஞர்கள் ,பொதுமக்கள் என பலரும் சூழ, அன்னாராது திருவுருவப்படம் வெளித்திடலில் இருந்து மலர்வணக்கதுடன் அரங்கிற்கு கொண்டு வரப்பட்டிருந்ததோடு, அவர்சார்திருந்த கத்தோலிக்க முறைப்படி முதல்வணக்கம் செலுத்தப்பட்டது.

அன்னாருடன் கூட்டாக பணியாற்றியிருந்த அறிவிப்பாளர் ஜஸ்ரின் அவர்கள், வணக்க நிகழ்வினை அவரது நினைவுகளை கூர்த்தவாறு தொகுத்து வழங்கியிருந்தார்.

ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக பிரான்சில் வசித்து வந்த டேவிட் ராஜேந்திரன், ஓரிரு மாதங்களுக்கு முன்னரே லண்டனில் குடியேறி சிறிது காலம் நோய்வாய்ப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்தார் என்பது குறிப்பிடதக்கது.

டேவிட் ராஜேந்திரன் கடந்து வந்த பாதை :

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இலங்கை வானொலி என்ற பெயரில் இயங்கி வந்த 1960-களின் பிற்பகுதியில் அந்த நிறுவனத்தில் தொழில் நுட்ப பொறுப்பாளராகப் பணியாற்றத் தொடங்கிய டேவிட் ராஜேந்திரன், அன்றைய நாட்களில் நேயர்கள் மத்தியில் பிரபல்யம் பெற்ற கிராமியப் பாடல்கள் நிகழ்ச்சியின் தொழில்நுட்பப் பொறுப்பாளராகவும் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் நீண்ட காலம் பணிபுரிந்திருக்கிறார்.

ஈழத்தில் பிரபல்யம் பெற்று விளங்கிய தென்பாங்கு நாட்டுக்கூத்து விற்பன்னர் அண்ணாவியார் இராசேந்திரன் அவர்களின் மகனான டேவிட் ராஜேந்திரன், தந்தையின் வழியில் பல நாட்டுக்கூத்துக்களில் நடித்ததுடன், நாடக நடிகராகவும் பல நாடகங்களில் நடித்து புகழ்பெற்று விளங்கினார்.

டேவிட் ராஜேந்திரன் அவர்கள் கதாநாயனாக நடித்து இலங்கை முழுவதிலும் மேடையேறி பெரு வெற்றி பெற்ற சிலப்பதிகாரத்தைத் தழுவிய கோவலன் கண்ணகி காவியத்தின் அடிப்படையில் அமைந்த 'முத்தா மாணிக்கமா' என்ற நாட்டுக்கூத்து மற்றும் 'சத்தியவான் சாவித்திரி' இசை நாடகம் ஆகியன இவரது கலைத்திறனை கலை உலகுக்குப் பறைசாற்றியிருந்தன.

வானொலி நாடக நடிகராவும் புகழ்பெற்றிருந்த டேவிட் ராஜேந்திரனுக்கு அளப்பரிய பெருமை தேடிக் கொடுத்த 'சத்தியவான் சாவித்திரி' நாடகம் இலங்கையில் மாவட்ட - பிராந்திய ரீதியில் மட்டுமல்லாது, தேசிய விருதுகளையும் அள்ளிக் கொடுத்து அவரது கலைச் சேவைக்கு அங்கீகாரம் வழங்கியிருந்தது.

பிரான்ஸ் தலைநகர் பரிசில் இயங்கி வந்த ரிரிஎன் என்று அழைக்கப்பட்ட தமிழ் தொலைக்காட்சி இணையம் தொலைக்காட்சியிலும் பணியாற்றிய டேவிட் ராஜேந்திரன் அவர்களின் திறமைக்கு அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'புதினக் கண்ணாடி' நிகழ்ச்சி மற்றும் ஒரு சான்றாகும். ரிரிஎன் தொலைக்காட்சியின் செய்திப் பிரிவிலும் கடமையாற்றிய டேவிட் ராஜேந்திரனின் அயராத உழைப்பினால் தொலைக்காட்சியின் செய்தி அறிக்கையும் மெருகூட்டப்பட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :