குடிநீருக்காக பயன்படுத்தப்பட்ட கிணற்றில் ஊற்றெடுக்கும் டீசல்!!



மினுவங்கொடை, கட்டுவெல்லகம – பாளுகங்கவெல பிரதேசத்தில் கடந்த 15 வருடங்களாக குடிநீருக்காக பயன்படுத்தப்பட்ட கிணற்றில் டீசல் ஊற்றெடுத்து வருகிறது.

கிணற்றில் நீர்மட்டத்திற்கு மேல் எண்ணெய் தன்மை உள்ள திரவம் மிதப்பதை அவதானித்த கிணற்றின் உரிமையாளர் அதில் இருக்கும் நீரை இறைத்துள்ளார்.

தண்ணீரில் டீசல் கலந்துள்ளதாக அறிந்து கொண்ட வீட்டின் உரிமையாளர்கள் ஒரு பரல் தண்ணீர் கிணற்றில் இருந்து எடுத்துள்ளதுடன் அதில் 80 வீதம் டீசல் இருந்துள்ளது.

நீர் பம்பியின் உதவியுடன் கிணற்றில் உள்ள நீர் அப்புறப்படுத்தப்பட்ட போதிலும் தொடர்ந்தும் கிணற்றில் டீசல் ஊற்றெடுத்து வருகிறது என உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அருகில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இருந்தே கிணற்று நீருடன் கழிவு பொருள் கலந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :