மோடி பெயரில் டீக்கடை, பலசரக்கு கடைகளை தொடங்கி பாரதீய ஜனதாவினர் நூதன முறையில் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து பாரதீய ஜனதா பிரசாரத்தை தொடங்கி உள்ளது. நாடு முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்து நரேந்திரமோடியும் ஆதரவு திரட்டி வருகிறார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி மணிசங்கர் அய்யர் பாரதீய ஜனதா குறித்து கூறுகையில், நரேந்திர மோடி டீ வியாபாரி போல் உள்ளதாக கருத்து தெரிவித்தார். அவரது இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இருப்பிலும் மணிசங்கர் அய்யர் கூறியது அவரது சொந்த கருத்து என்றும், காங்கிரசின் கூற்று அல்ல என்றும் காங்கிரஸ் அறிவித்தது. ஆனால் இந்த விஷயத்தை பாரதீய ஜனதாவினர் தீவிரமாக எடுத்துக் கொண்டு அதையே தங்களது தேர்தல் பிரசார யுக்தியாக கடைபிடிக்க தொடங்கியுள்ளனர்.
நரேந்திரமோடி பெயரில் டீக்கடை, பலசரக்குக்கடை, நகைக்கடை என பலவற்றை தொடங்கி நூதன முறையில் பாரதீய ஜனதாவின் சாதனைகளை விளக்கி பிரசாரம் செய்து வருகின்றனர்.
மதுரையில் நரேந்திர மோடி பேரவை சார்பில் மோடி பெயரில் டீக்கடை, சிகை அலங்காரக்கடை போன்றவை ஊரக பகுதிகளில் தொடங்கப்படுகின்றன. மதுரை நகர் பகுதிகளிலும் கீரைத்துறை, செல்லூர், பச்சரிக்காரத் தெரு, ஆரப்பாளையம் ஆகிய பகுதிகளில் இந்த கடைகள் திறக்கப்படுகின்றன.
இவற்றின் மூலம் பாரதீய ஜனதாவின் கொள்கைகள், குஜராத்தில் நரேந்திரமோடியின் செயல் திட்டங்கள், அதனால் ஏற்பட்டுள்ள வெற்றிகள் போன்றவற்றை துண்டு பிரசுரங்களாக வெளியிட்டு மக்களிடம் ஆதரவு திரட்ட திட்டமிட்டுள்ளனர்.

0 comments :
Post a Comment