கல்வி வளர்ச்சிக்கு அல்-முனீறா பெண்கள் பாடசாலை பெரும் பங்காற்றி வருகின்றது-உதுமாலெப்பை




சலீம் ரமீஸ்-

பெண் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு அல்-முனீறா பெண்கள் உயர் பாடசாலை பெரும் பங்காற்றி வருகின்றது. இப்பாடசாலை கல்வியிலும் ,பௌதீக வளர்ச்சியிலும் மேலும் முன்னேற்றம் அடைவதற்கு தேசிய காங்கிரஸின்; தேசிய தலைவரும், அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களும், நானும் என்றும் பக்கபலமாக இருப்போம். என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை அல்-முனிறா பெண்கள் உயர் பாடசாலையின் ஏடு தொடங்கும் விழா அதன் அதிபர் எம்.ஐ.அப்துல் ஸலாம் தலைமையில் இடம் பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள தேசிய மட்டத்தில் இடம் பெறும் ஏடு
தொடங்கும்(வித்தியாரம்பம்) விழாவில் தரம் 01 மாணவர்களை வரவேற்று அவர்களை கௌரவிக்கின்ற நிகழ்வானது அவர்களுடைய வாழ்நாளில் மறக்கமுடியாத முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.

அன்று எங்களை எமது தாய்,தந்தையர் ஆரம்ப கல்விக்கு பாடசாலையில் இணைக்கின்ற போது ஆரம்ப தினத்தன்றே எங்களுக்கு பெரும் அச்சம் நிலவும், நன்றாக இருந்த எங்களையும், தாய், தந்ததையரையும் ஏதோ ஒரு சக்தி பிரிக்கின்ற ஒரு உணர்வு வரும்.

ஆனால் இன்று அவ்வாறு இல்லை. அழகான வெள்ளை நிற ஆடை அணிந்து ,மாலை இட்டு, பேண்ட வாத்தியம் இசைக்கப்பட்டு ,சனத்திரள் மத்தியில் தரம் இரண்டாம் வகுப்பு மாணவர்களால் வரவேற்கப்படுவதும், அவர்களை எந்த அச்சமுமின்றி புன்முறுகலுடன் பாடசாலைக்குள் வருவதை பார்க்கின்ற போது எமக்குள் மகிழ்ச்சியை தருகின்றது.

அதுமட்டுமல்ல இவர்களுடைய நிகழ்வுகளில் கலந்து கொள்வதும் சந்தோசமாக இருக்கின்றது. இவ்வாறான எமது பிள்ளைகளுக்கு ஆரம்பத்திலிருந்தே மார்க்க விழுமியங்களை சிறப்பாக கற்றுக் கொடுக்க வேண்டும். இவர்களுடைய கல்விக்கு உதவுவர்களாக இருக்க

வேண்டும். என்னைப் பொறுத்த வரையில் எனக்கு வழங்கப்படுகின்ற நிதியினை அதிகமாக கல்விக்காகவே வழங்குகின்றேன்;. இலங்கை நாட்டைப் பொறுத்த வரையில் அரசியல் அதிகாரம் இல்லாமல் எதுவும் செய்யமுடியாது. எங்களுக்கு கிடைத்த அரசியல் அதிகாரத்தை மக்கள் பணிக்கு சிறப்பாக பயன்படுத்துகின்றோம். விஷேடமாக கல்வித்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றோம். எமது கண்மனியாம் நபி(ஸல்) அவர்களும்
கல்விக்கு முக்கியத்துவம் அளித்தார்கள். கல்வியை சிறப்பாக கற்க வேண்டும் எனவும்

வலியுறுத்தியுள்ளார்கள். எனவே, எமது சிறார்களின் கல்வி வளர்ச்சிக்கும் ,பாடசாலை பௌதீக வளர்ச்சிக்கும் உதவ வேண்டும். எனவும் அமைச்சர் உதுமாலெப்பை மேலும் தெரிவித்தார்.

இதே நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், வலயக்
கல்விப்பணிப்பாளர் ஏ.எல.;எம்.ஹாசீம், கோட்டக்கல்வி அதிகாரி எம்.ஏ.சி.கஸ்ஸாலி, பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ் உட்பட அதிபர்கள், வங்கி முகாமையாளர்கள், கல்விமான்கள்,பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :