என்.குகதர்ஷன்
வாகரை பிரதேசத்தில் காட்டு யானை ஒன்றை சுட்டுக் கொன்றுள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று புதன்கிழமை அதிகாலை வாகரை தோணிதாண்டமடு வயல் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பிரதேசத்தில் துப்பாக்கி சூட்டுக் காயத்துடன் யானை ஒன்று இறந்து கிடப்பதாக தங்களுக்கு பொதுமக்களினால் தெரிவித்த முறைப்பாட்டினையடுத்து அவ்விடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரனைகளின் பின்னர் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து உள்ளுரில் தயாரிக்கப்பட்ட கட்டுத்துவக்கு ஒன்றினையும் கைப்பற்றியுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி பிரதேசத்தில் காட்டு யானைகளின் தொல்லை நீண்டகாலமாக நிலவி வந்துள்ளதாகவும் கடந்த இரண்டு நாட்களுக்கும் முன்பும் குறித்த யானை இரவு வேளைகளில் வந்து நெல் வயல்களை நாசமாக்கியதுடன் காவல் குடிசைகளையும் சேதமாக்கியதாகவும் அத்துடன் அப்பிரதேச குடியிருப்பாளர்களின் உயிருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்ததாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை இறந்த யானையின் உடலை அவ்விடத்தில் இருந்து அகற்றுவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மட்டக்களப்பு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தின் கவனத்திற்கு தாம் தெரியப்படுத்தியுள்ளதாக வாகரை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை இப்பிரதேசத்தில் இவ்வாரத்திற்குள் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி இரண்டு யானைகள் இறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment