கதிகாம நிரூபர்-
கதிர்காமக் கந்தன் தான் எனவும் தன்னிடம் முழு உலகத்தையும் அழிக்கும் சக்தி இருப்பதாகவும் கூறி 2 இளைஞர் ஒருவர் கதிர்காம கந்தன் ஆலயத்திற்கு அருகில் உள்ள புளிய மரம் ஒன்றில் ஏறி அமர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.
இந்த சம்பம் இன்று காலை இடம்பெற்றது. கதிர்காமம் 20 ஏக்கர் பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் கதிர்காமம் வள்ளியம்மன் ஆலயத்திற்கு அருகில் இருக்கும் புளிய மரத்தில் ஏறியே இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.
சில பதாகைகளை காட்சிக்கு வைத்து விட்டு மரத்தில் ஏறி உண்ணாவிரத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர், தான் நாட்டு ஜனாதிபதியை சந்திக்கும் வரை மரத்தில் இருந்து இறங்க போவதில்லை என தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு சென்ற கதிர்காம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்சிறி சந்திமால் ஜனாதிபதி சந்திக்க ஏற்பாடுகளை செய்து தருவதாக கூறி குறித்த இளைஞரை தந்திரமான முறையில் மரத்தில் இருந்து இறங்க செய்தார்.
கதிர்காமம் 20 ஏக்கர் பிரதேசத்தை சேர்ந்த மஹாநாம லொக்குகே ஆராச்சிகே ரோஹித்த என்ற இளைஞரே இவ்வாறு தன்னை கதிர்காமக்கந்தன் என தெரிவித்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மறைந்து போன ஸ்கந்தக குமரன் நானே. உங்கள் அனைவரும் நன்மை செய்வதற்காக இந்த பூமிக்கு மீண்டும் திரும்பியுள்ளேன். ஒரே நேரத்தில் இந்த முழு உலகத்தையும் என்னால் அழிக்க முடியும் என்ற வாசகம் எழுதப்பட்ட பதாகை ஒன்றையும் இளைஞர் காட்சிப்படுத்தியிருந்தார்.
0 comments :
Post a Comment