பழுலுல்லாஹ் பர்ஹான்-
கடந்த சில மாதங்களாக காத்தான்குடி நகர சபையில் இடம்பெறும் மாதாந்த சபை அமர்வுகளில் ஒரு உடகவியலாளர் மாத்திரம் அனுமதிக்கப்பட்டு மற்றைய ஊடகவியலாளர்கள் அழைக்கப்படாமல் புறக்கணிப்பட்டு வருவதாக தேசிய பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்களில் கடமையாற்றும் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த பிராந்திய ஊடகவியலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக நகர சபையின் சபை அமர்வில் புறக்கணிக்கப்பட்ட ஒரு ஊடகவியலாளர் கருத்து தெரிவிக்கையில் பிரதேசங்கள்; ,மாவட்டங்கள் தோரும் இடம்பெறும் நிகழ்வுகளை ,பொது மக்களின் பிரச்சினைகளை வெளி உலகத்திற்கு தெரியப்படுத்தி அதற்கான தீர்வுகளை பெற்று கொடுப்பதற்கு பாரிய பணி செய்யும் ஊடகவியலாளர்கள் புறக்கணிப்டுவது வேதனைக்குரியது எனவும் தெரிவித்ததோடு இது குறித்து இரண்டு தடவைகள் காத்தான்குடி நகர சபை தவிசாளரிடம் தொலைபேசி மூலமாகவும் ,நேரடியாகவும் முறையிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அண்மையில் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கையில் காத்தான்குடி நகரசபையின் சபை அமர்வுகளை பார்வையிடுவதற்கு ஊடகவியலாளர்களை அனுமதிப்பதெனவும் ,அழைப்பதெனவும் நகர சபையின் மாதாந்த அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் இதில் தேசிய ஊடகங்களுக்கு பிராந்திய ஊடகவியலாளர்களாக செயற்படும் ஊடகவியலாளர்களை மாத்திரமே இதற்கு அனுமதிக்கப்படுவர் எனவும் அவர்களை மாத்திரமே அழைப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டு பின்னர் மாதாந்த மற்றும் அவசர சபை அமர்வுகளில் ஊடவியலாளர்கள் அனுமதிக்கபட்டு வந்த வேலையிலே மீன்டும் அழைக்கப்படாமல் மீன்டும் புறக்கணிப்பட்டு வருகின்றனர் அத்தோடு காத்தான்குடி நகர சபையின் மற்றைய நிகழ்வுகளுக்கு ஊடகவியலாளர் கௌரவமாக அழைக்கப்படுகின்றனர்.
இது குறித்து காத்தான்குடி நகர சபை தவிசாளர் மற்றும் செயலாளர் கவனத்தில் கொள்ள வேண்டுமெனவும் மீன்டும் காத்தான்குடி நகர சபையின் மாதாந்த மற்றும் அவசர சபை அமர்வுகளில் ஊடகவியலாளர் அழைக்கப்ட்டு அனுமதிக்கப்பட வேண்டுமெனவும் ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.
கடந்த வருடம்; காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் காத்தான்குடி நகரசபையில் வெளிப்படத்தன்மை பேணுமாறும் நகரசபை அமர்வுகளை பார்வையிட ஊடகவியலாளர்களை அனுமதிக்குமாறும் கோரி காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திற்கு முன்னாள் கவனஈர்ப்பு போராட்டமொன்றை நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment