பாணந்துறை, , கலிகொட ஸ்ரீ மகா விகாரையின் விகாராதிபதி தங்குமிடத்துக்கு இனந்தெரியாதோரால் துப்பாக்கிச் சூடு
பாணந்துறை, கலிகொட ஸ்ரீ மகா விகாரையின் விகாராதிபதி தங்குமிடத்துக்கு இன்று அதிகாலை இனந்தெரியாதோரால் துப்பாக்கிச் சூடு (26) நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த விகாராதிபதி தங்கியிருந்த அறையிலுள்ள ஜன்னலினூடாகவே இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த துப்பாக்கிச்சூடு சுவரிலேயே பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச்சூட்டை அடுத்து ஜன்னல் பக்கத்திலிருந்து கறுப்பு நிற ஆடையணிந்த ஒருவர் அங்கிருந்து ஓடிச் செல்வதை அவதானித்ததாக விகாராதிபதி ரத்னபுர பொத்துபிடியே ஞானசார தேரர் பொலிஸில் செய்துள்ள முறைப்பாட்டில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment