இறுதி டெஸ்டில் இலங்கைக்கு அதிர்ச்சி கொடுத்து தொடரினை சமப்படுத்தியது பாகிஸ்தான்.

லங்கை - பாகிஸ்தான் அணிகளிடையிலான 3 ஆவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை அணிக்கு அதிர்ச்சியளித்த பாகிஸ்தான் அணி 5 ஆவது நாளில் 302 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை அடைந்து தொடரினை சமப்படுத்தியது.

இப்போட்டியில் முதல் நாளிலிருந்தே ஆதிக்கம் செலுத்திய இலங்கை அணி இன்று தோல்வியைத் தழுவியது.

ஷார்ஜா மைதானத்தி கடந்த 16 ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 428 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

அறிமுக வீரர் தில்ருவன் பெரேரா 95 ஓட்டங்களையும் ஏஞ்சலோ மெத்தியூஸ் 91 ஓட்டங்களையும் பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 341 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. அஹமட் ஷெஹ்ஷாட் 147 ஓட்டங்களைக் குவித்தார்.

இப்போட்டியின் கடைசி நாளான இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸை 133 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்கள் என்ற நிலையிலிருந்து தொடர்ந்த இலங்கை 214 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது கடைசி விக்கெட்டை இழந்தது.

இதில் பிரசன்ன ஜயவர்தன 49 ஓட்டங்களையும் மஹேல ஜயவர்தன 46 ஓட்டங்களையும் கௌஷால் சில்வா 36 ஓட்டங்களையும் எஞ்சலோ மெத்யூஸ் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அப்துர் றெஹ்மான் 56 ஓட்டங்களுக்கு 4 விக்கடகளையும் சயீத் அஜ்மால் 53 ஓட்டங்களுக்கு 3 விக்கட்களையும் மொஹமத் தல்ஹா 65 ஓட்டங்களுக்கு 3 விக்கட்களையும் வீழ்த்தினர்.

பாகிஸ்தான் அணி இப்போட்டியில் வெற்றி பெறுதவற்கு இறுதி நாளில் மேலும் 60 ஓவர்கள் வீசப்பட வேண்டிய நிலையில் 302 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது.

இப்போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடையும் என பலரும்  எதிர்பார்த்திருந்த நிலையில் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 57.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது பாகிஸ்தான் அணி.

அவ்வணியின் சார்பில்  அபாரமாக துடுப்பெடுத்தாடிய அஸார்  அலி 103 ஓட்டங்களைக் குவித்தார். பந்துவீச்சில் இலங்கை அணியின் சுரங்க லக்மால் 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பாகிஸ்தான் அணி 3 ஆவது போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 3 போட்டிகளைக்கொண்ட இந்த டெஸ்ட் தொடர் 1-1 என்ற ரீதியில் சமநிலையில் முடிவடைந்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக அஸார் அலி தெரிவானார். தொடரின் நாயகனாக இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் தெரிவானார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :