களுவாஞ்சிக்குடி திருப்பழுகாமம் இந்து கலா மன்றம் நடாத்திய பொங்கல் விழாவும்,பரிசளிப்பு விழாவும்



ந.குகதர்சன்


ளுவாஞ்சிக்குடி திருப்பழுகாமம் இந்து கலா மன்றம் நடாத்திய பொங்கல் விழாவும், இந்து கலாமன்ற அறநெறிப்பாடசாலையின் பரிசளிப்பு விழா நிகழ்வானது திருப்பழுகாமம் திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் திருப்பழுகாமம் இந்து கலா மன்றத்தின் தலைவர் எஸ்.குகன் தலைமையில் சனிக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன், பொன்.செல்வராசா பாக்கியசெல்வம் அரியநேத்திரன் ஆகியோரும் மற்றும் ஆன்மீக அதிதியாக போரதீவு பத்திரகாளியம்மன் ஆலய பிரதம குருக்கள் பிரம்மஸ்ரீ வி.கே.சந்திரகாந்தன் குருக்களும் ஏனைய அதிதிகளாக தமி;ழ் தேசிய கூடடமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெட்ணம், ஞா.கிருஸ்ணபிள்ளை ஆகியோரும் மற்றும் கிராம பிரமுகர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது திருப்பழுகாமம் இந்து கலாமன்ற அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும், மாணவர்களுக்கான பரிசளிப்பும் மற்றும் அதிதிகளின் உரைகளும் இடம்பெற்றதுடன், கவியரங்கமும் இடம்பெற்றது.

அத்துடன் கலா மன்றத்தின் சிரேஸ்ட உறுப்பினர்கள் மூவருக்கான கௌரவிப்பும் இடம்பெற்றது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :