முஸ்­லிம்கள் பிர­பா­க­ர­னுடன் இணைந்­தி­ருந்­தால் இன்று இலங்­கை பௌத்த நாடு இல்லை - வஜிர தேரர்

முஸ்­லிம்கள் அன்று பிர­பா­க­ரனின் எல்.ரீ.ரீ.ஈ உடன் ஒன்று சேர்திருந்தால் இந்த இலங்கை பௌத்த நாடு என்று சொல்­வ­தற்கும் எங்­களால் முடிந்தி­ருக்காது. அன்று இந்த நாட்டின் பிரி­வி­னைக்கு எதி­ராக முஸ்­­லிம்­கள் செயல்­பட்­ட ­தா­லேயே அவர்கள் இர­வோடு இர­வாக வடக்கில் இருந்து துரத்­தப்­பட்­டா ர்கள். இன்றும் அகதி முகாம்­க­ளில் வாழ்ந்து வரு­கின்­றார்கள் என பௌத்த மத­குரு பேரா­சி­ரியர் கம்­பு­ரு­க­முவ வஜிரதேரர் தெரி­வித்தார்.

முன்னாள் சபா­நா­யகர் எம்.எச்.முஹ ம்மத், பௌத்த மத­குரு பேரா­சி­ரியர் கம்­பு­ரு­க­முவ வஜிரதேரர் ஆகிய இரு­வ­ரையும் தலை­வர்­களாகக் கொண்ட பௌத்த முஸ்லிம் இன ஐக்கிய அமைப்பின் கூட்டம் இஸ்­லா­மிய நிலை­யத்தில் நடை­பெற்­றது.

இக் கூட்­டத்­திற்கு மௌலவி தாசீம், ஹஸ்­புல்லாஹ் மௌலவி, முஸ்லீம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன், சட்­டத்­த­ரணி அப்பாஸ், மற்றும் அகில இலங்கை ஜம்­மி­யத்துல் உலமா சபை யின் மெள­ல­வி­களும் தஹ்லான் ஆகி ­யோரும் சமுகம் அளித்­தி­ருந்­தனர்.
ஒரே நாடு அனை­வரும் இந்த நாட்­ட வர் சக­ல­ருக்கு சம உரிமை என்ற கோட் ­பாட்டில் கையேடு ஒன்று தயா­ரி க்­க­கப்பட்­டி­ருந்­தது. இதனை சகல மக்­க­ளுக்கும் கைய­ளிக்க வேண்டும் என வும் அங்கு தெரி­விக்­கப்­பட்­டது. இங்கு தொடர்ந்து உரை­யாற்­றிய கம்­பு­ரு­க­முவ வஜி­ர­தே­ரர்,

எமது சமு­கத்தில் உள்ள ஒருவர் இரு வர் முஸ்­லீம்­க­ளுக்­காக செய்யும் அநீ­தி­களை வைத்து இந்த நாட்டில் வாழும் 99 வீத­மான பௌத்­தர்­க­ளையும் நாம் கெட்­ட­வர்கள் என்று குறை காண முடி­யாது.

அதே போன்­றுதான் முஸ்­லீம்­களில் ஒருவர் அல்­லது இருவர் செய்யும் செயல்­களை வைத்­துக்­கொண்டு முழு முஸ்லிம் சமு­கத்­தையும் பௌத்­த ர்கள் இழி­வு­ப­டுத்த முடி­யாது. அந்தக் கால த்தில் இந்த நாட்டில் இரண்டு அர­சி யல் கட்­சி­கள்தான் இருந்­தன.

ஐ.தே.யும் ஸ்ரீ.ல.சு.கட்­சியுமே அவை­யா­கும். இக்­கட்­சி­யி­லேயே தமிழ், முஸ்­லிம்கள் பிர­தி­நி­திகள் இக்­கட்­சிகள் மூலம் அர­சி­யலைச் செய்து தமது மக்­க ளின் பிரச்­சி­னைக­ளுக்கு தீர்வு கண்­ட னர். அதில் ஒரு­வ­ரா­கவே முன்னாள் அமைச்சர் எம்.எச்.முஹம்­மத் திகழ்­கி­றார். அவர் அர­சியல் 60 வருட கால த்தில் சகல சமு­கங்­க­ளு­கக்கும் சேவை செய்தார்.

அர­சியல் வாதிகள் தமது சுய­லா­பத்­தி ற்கும் பாரா­ளு­மன்­றத்­திற்கும் செல்­வ ­தற்­காக மக்­களை இன­ரீ­தி­யாக பிரித்­த னர். அதில் காலம்­சென்ற அமிர்­த­லிங் கம் தமிழர் விடு­தலைக் கூட்­டணி என தமிழ் மக்­களைப் பிரித்தார், அதன் பின் முஸ்லிம் காங்­கிரஸ் கட்சி ஆரம்­பிக்­கப்­பட்டு முஸ்­லிம்­களும் பிரிந்த அர­சி யல் நடத்தி அத­னூ­டாக பாராளு­மன் றம் சென்­றனர்.

இதனால் இனங்­க­ளுக்­கி­டையே விரி­சல்கள் ஏற்­பட்­டன. அர­சி­யல்­வா­தி­க ளும் தொடர்ந்தும் மக்­களை பிரித்து வைத்­தி­ருக்­கவே விரும்­பு­கின்­றனர். இந்த நாட்டில் வாழும் முஸ்­லீம்கள் ஒரு­போதும் இந் நாட்­டுக்கு அநீதி இழைக்­க­வில்லை. அவர்கள் இந்த நாட்­டுக்கு நல்­ல­தையே செய்து வந்­தனர். அண்மைக் கால­மா­கவே இந்த ஹலால் பிரச்­சினை ஏற்­பட்­டது. இதனால் சிறு சிறு விரி­சல்கள் ஏற்­ப ட்டு வரு­கின்­றன. நாம் அனை­வரும் இலங்­கையர் என்ற ரீதியில் நாம் செயற்ப­ட­ வேண்டும் என்றார்.

சட்­டத்­த­ரணி அப்பாஸ் -இங்கு உரை­யாற்­று­கை­யில்
இந்த நாட்டில் மலா­ய­ச­மு­கத்­தினர் ஒரு தொகை­யினர் வாழ்ந்து வரு­கின்­றனர். அவர்களை அண்மையில் வெயிடப்பட்ட அரச புள்ளிவிபரத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளனர்.

அவர்களை முஸ்லிம்கள் என கணக் கிட்டுள்ளனர். இதைப்பற்றி பல கடித ங்கள் ஜனாதிபதிக்கு எழுதியும் எந்த வித மறுமொழியும் வரவில்லை யென அவர் தெரிவித்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :