எஸ்.எல். மன்சூர்-
நாட்டில் சமாதானத்தையும் சகவாழ்வினையும் கல்வியின் உடாக ஏற்படுத்துவதற்கான செயற்றிட்டம் அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் அக்கரைப்பற்று கல்வி வலயப் பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் வதிவிடச் செயலமர்வு கடந்த சனி, ஞாயிறு (18,19ஆந்திகதிகளில்) தினங்களில் அக்கரைப்பற்று ஹெஸ்ட்ஹவுஸில் உதவிக் கல்விப்பணிப்பாளரும், யுனிசெப் இணைப்பாளருமான எஸ்.எம். ஜெமீல் தலைமையில் நடைபெற்றது.
யுனிசெப் அனுசரணையுடன் இடம்பெற்ற இப் பயிற்சி செயலமர்வுக்கு அம்பாறைக் கல்விவலயத்திலிருந்து வருகை தந்திருந்த இரண்டு சிங்கள மொழி வளவாளர்கள் பயிற்சிகளை வழங்கினர். வகுப்பறையில் மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகளை மகிழ்ச்சிகரமான முறையில் மேற்கொள்கின்றபோது அங்கே சிறப்பான கற்றல் இடம்பெறும். வகுப்பறையிலிருந்து கற்றல் ஊடாக சமாதானத்தையும், சகவாழ்வையும் கட்டியெழுப்பலாம் என்கிற தாரகை மந்திரத்தினை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களுக்குள் சமாதான சகவாழ்வைக் கட்டியெழுப்பத்தேவையான செயற்பாடுகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டன. நாட்டின் இனரீதியான பிளவுகள் ஏற்படுவதற்கு மொழியின் அவசியம் உணரப்பட்டுள்ளது. இதனை வகுப்பறையில் ஆசிரியர்கள் சகோதர மொழியான சிங்களத்தினை தமிழ் பேசும் மாணவர்களும், தமிழை சிங்கள மாணவர்களும் ஆரம்பத்திலிருந்தே பெறுகின்றபோது பிரச்;சினைகளை தவிர்த்துக் கொள்ளலாம்.
இந்தவகையில் ஆசிரியர்கள் ஆரம்பக்கல்வி வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி நூலிலுள்ள சிங்களச் சொற்களையும், சிறிய சிறிய வசனங்களையும் ஆடல், பாடல், சம்பாசனை போன்ற செயற்பாடுகளின் ஊடாக வழங்குவதற்கு தன்னைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது. இது சரியான முறையில் வகுப்பறைகளில் மாணவர்களைச் சென்றடைவதில்லை என்பதை உணர்ந்து சமாதான சகவாழ்வு எனும் அடிப்படையில் இவ்வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் உதவிக் கல்விப்பணிப்பாளர் எஸ்.எம். ஜெமீல் தெரிவித்தார். இந்நிகழ்வுகளில் அக்கரைப்பற்று வலயத்தின் சிங்களத்திற்கான ஆசிரிய ஆலோசகரான திருமதி இனாம் ஒசனும் கலந்து கொண்டார்.
படங்களில் : அக்கரைப்பற்று கல்வி வலயத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சமாதான சகவாழ்வுக்கான நிகழ்சித் திட்டச் செயலமர்வு அண்மையில் அக்கரைப்பற்று ஹெஸ்ட் ஹவுஸில் உதவிக் கல்விப்பணிப்பாளர் எஸ்.எம். ஜெமீல் தலைமையில் இடம்பெற்றது. ஆசிரியர்கள் மகிழ்சிகரமான கற்றலில் ஈடுபட்டுள்ளதை படங்களில் காணலாம். சிங்கள வளவாளர்கள், ஆசிரிய ஆலோசகர் இனாம் ஒசனும் அருகில் காணப்படுகின்றனர்.
0 comments :
Post a Comment