அக்கரைப்பற்று ஜுனியர் கல்லூரி வித்தியாரம்ப விழா..



ஏ.ஜி.ஏ.கபூர்-
க்கரைப்பற்று ஜுனியர் கல்லூரியில் இந்த வருடம் (2014) தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் வித்தயாரம்ப நிகழ்வு நேற்று (23) வியாழக்கிழமை ஜுனியர் கல்லூரி அதிபர் எம்.எச்.அப்துல் கபூர் தலைமையில் நடைபெற்றது.

இவ் வித்தியாரம்பம் நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேய்க் ஏ.எல்.எம்.காசிம் மௌலவி,அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான அ.ஸ.அஹமட் கியாஸ், அஷ்ஷேய்க் ஏ.எம்.றஹ்மதுல்லா மௌலவி, உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் அதாஉல்லாவின் பொது சனத் தொடர்பு உத்தியோகத்தரும் மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம்.ஸபீஸ், மாநகர சபை உறுப்பினர் என்.எம்.நஜுமுதீன், உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.அபூத் தாஹிர்,ஆங்கில மொழிக்கான சேவைக் கால ஆசிரியர் இப்றாஹீம்,யிஷா மஹா வித்தியாலய அதிபர் எம்.ஏ.ச்.ஏ.ஹைய்யூ ஓய்வு பெற்ற அதிபர்களான அதிபர் திலகம் எம்.ஏ.உதுமா லெவ்வை, ஏ.எல்.எம்.ஷரீப் மௌலவி, எம்.எச்.ஹனிபா மௌலவி மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதிதிகள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, தரம் இரண்டு மாணவர்கள் புதிதாக தரம் ஒன்றுக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட 123 மாணவர்களையும் மலர்ச் செண்டு; கொடுத்து இன்முகத்துடன் வரவேற்றனர்,

தொடர்ந்து பிரதிக் கல்விப் பணிப்பாளர் அ.ஸ.அஹமட் கியாஸ் தேசியக் கொடியேற்ற மாணவர்கள் தேசியக் கீதம், அக்கரைப்பற்று மான்மியம், பாடசாலைக் கீதம் மற்றும் வரவேற்புப் பாடல் முதலியன இசைக்க நிகழ்வு ஆரம்பமானது.

புpன்னர் எம்.எச்.ஹனிபா மௌலவி அவர்கள் துஆப் பிராhத்தனை செய்து வித்தியாரம்ப நிகழ்வினை ஆரம்பித்து வைக்க பிரதம அதிதி வலய கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேய்க் ஏ.எல்.எம்.காசீம,; பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான அ.ஸ.அஹமட ;கியாஸ், அஷ்ஷேய்க் ஏ.எம்.றஹ்மதுல்லா மௌலவி, உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் அதாஉல்லாவின் பொது சனத் தொடர்பு உத்தியோகத்தரும் மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம்.ஸபீஸ், மாநகர சபை உறுப்பினர் என்.எம்.நஜுமுதீன், உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.அபூத் தாஹிர்,ஆங்கில மொழிக்கான சேவைக் கால ஆசிரியர் இப்றாஹீம்,ஆயிஷா மஹா வித்தியாலய அதிபர் எம்.ஏ.சி.ஏ.ஹைய்யூ, ஓய்வு பெற்ற அதிபர்களான அதிபர் திலகம் எம்.ஏ.உதுமா லெவ்வை, ஏ.எல்.எம்.ஷரீப் மௌலவி, எம்.எச்.ஹனிபா மௌலவி முதலியோர் மாணவாகளுக்கு வித்தியாரம்பம் செய்து வைத்ததோடு, அக்கரைப்பற்று 06ம் பிரிவு கிராம அபிவிருத்தி சங்கத்தினால் வழங்கப்பட்ட புத்தகப் பைகளையும் வழங்கி வைத்தனர்.

நிகழ்வில் அதிபர் எம்.எச்.அப்துல் கபூர் அவர்களின் தலைமையுரையினைத் தொடாந்து வலய கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேய்க் ஏ.எல்.எம்.காசீம,; பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான அ.ஸ.அஹமட ;கியாஸ், அஷ்ஷேய்க் ஏ.எம்.றஹ்மதுல்லா மௌலவி ஆகியோர் உரையாற்றினார்கள். நிகழ்வில் மாணவ, மாணவிகளின் மும்மொழிகளிலான பேச்சுக்கள், பாடல்கள் மற்றும் நடனங்களும் இடம் பெற்றன.

ஆரம்ப பாடசாலையாகவும், வளங்கள் குறைந்த பாடசாலையாகவும் இருந்தபோதிலும் பெரிய வளங்கள் கூடிய பாடசாலை போன்று சிறப்பாக கல்லூரி அதிபர், பிரதி அதிபர்,ஆசிரிய, ஆசிரியைகள்,பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் இணைந்து சிறப்பாக நிகழ்வை ஏற்பாடு செய்திருந்ததாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :