அட்டாளைச்சேனை டாக்டர் ரீபி.ஜாயா வித்தியாலயத்தில் நடைபெற்ற வித்தியாரம்ப நிகழ்வு



ட்டாளைச்சேனைக் கோட்டத்திலுள்ள டொக்டர் ரீபி.ஜாயா வித்தியாலத்தில் இன்று(2014.01.4) வித்தியாரம்ப நிகழ்வு இடம்பெற்றது. வழமைக்கு மாறாக இப்பாடசாலையில் மாணவர்களின் செயற்பாடுகளைப் பரிசோதிக்கும் வகையில் நிகழ்ச்சி ஒன்றை ஒழுங்கு செய்து அதில் முதலாவதாக செய்து முடிக்கின்ற மாணவனுக்கு விசேட அதிதியினால் வித்தியாரம்பம் ஆரம்பிக்கப்படும் என அறிவித்து அதற்கான அறிவுறுத்தல்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. 

இதன் அடிப்படையில் இவ்வாண்டு முதலாம் தரத்திற்கு உள்வாங்கப்பட்ட மாணவர்களின் கைகளில் பலூன்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி ஆரம்பமானதும், மாணவர்களும் விரைவாக ஊதி பலூனை வெடிக்கவைத்து மகிழ்ந்தனர். இவ்வாறு தங்களிடையே போட்டிபோட்டுக் கொண்டு வெடிக்கச் செய்த மாணவர்கள் விரைவாக வருகை தந்தனர். 

அதையடுத்து அதிதிகளினால் மாணவர்களுக்கான வித்தியாரம்ப நிகழ்வுகள் சிறப்பாக ஆரம்பித்துவைக்கப்பட்டமை விசேட அம்சமாக இருந்தது.

இந்த நிகழ்வுகள் யாவும் இப்பாடசாலையின் அதிபர் ஏ.சி. நியாஸ் தலைமையில் அக்கரைப்பற்று வலயக் கல்விப்பணிப்பாளர் அல்ஹாஜ். ஏ.எல்.எம். காசீம், பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஏ.எஸ்.ஏ. கியாஸ், அட்டாளைச்சேனைக் கோட்டக்கல்வி அதிகாரி அல்ஹாஜ்.எம்.ஏ.சி. கஸ்ஸாலி, உதவிக் கல்விப்பணிப்பாளர் அல்ஹாஜ். எம்.ஏ. அபூதாஹிர், முறைசாராக் கல்வி அதிகாரி அல்ஹாஜ். என். சம்சுதீன், ஆசிரிய ஆலோசகர் எஸ்.எல். மன்சூர், முன்னாள் கல்வியதிகாரி அல்ஹாஜ்.யு.எம். வாஹிட் மற்றும் பிரமுகர்கள், நலன்விரும்பிகள், பெற்றோர்கள், பாடசாலையின் அபிவிருத்தி அமைப்பினர், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்வுக்கு வருகை தந்த அதிதிகள் மாலையிட்டு பாடசாலை சமூகத்தினால் வரவேற்கப்படுவதையும், தேசிய மற்றும் பாடசாலைக் கொடிகளை முறையே வலயக் கல்விப்பணிப்பாளர், பாடசாலையின் அதிபர் ஏற்றுவதையும், மாணவர்களுக்கு எழுத்தை எழுதி ஆரம்பிப்பதையும் இப்பாடசாலைக்கான வெப்தளம் ஒன்றும் உத்தியோகபூர்வமாக வலயக் கல்விப்பணிப்பாளரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :