கல்பிட்டி மன்னார் தனியார் பஸ் கட்டணம் அதிகரிப்பு மக்கள் விசனம்- படங்கள்

முசலியான்-
ல்பிட்டியில் இருந்து இலவங்குளம்.ஓயாமடுவ பாதை ஊடாக மன்னார் நோக்கி செல்லும் தனியார் பஸ்களின் நடத்துனர்கள்(கிலினர்) தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நியமித்த கட்டணத்தினை விட அதிகமாக பெறப்படுவாத பிரயாணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கட்டணம் அதிகமாக பெறுவது குறித்து மக்கள் உரியவரிடம் வினவினால் நீங்கள் விருப்பம் என்றால் பஸ்களிள் வரலாம் இல்லை என்றால் இரங்கி விடலாம் என பிரயாணிகளிடம் நடத்துனர் அநாகரிகமான முறையில் நடந்து கொள்கின்றனர்.

அதே போன்று பணத்திற்கான கட்டண சீட்டையும் கொடுப்பது இல்லை போக்குவரத்து ஆணைகுழுவினால் நடைமுறை படுத்தப்பட்ட கட்டண பட்டியலையும் மக்களின் பார்வைக்கும் தொங்க விடுவதில்லை அதே வேலை போகும் நேரத்தில் இடை நடுவில் இவ்பஸ்கள் பலுதடைகின்றன இதுகுறித்தும் கவலை தெரிவிக்கின்றனர்.

மக்களின் நலன் குறித்து மன்னார் போக்குவத்து ஆணைக்குழு மற்றும் சம்பந்தபட்ட அதிகாரிகள் உடனடியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பயணிகள் கோரிக்கைவிடுக்கின்றனர் .


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :