சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முடிவுக்கு நான்கு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் செயற்குழு கூட்டம் துபாயில் நேற்று முன்தினம் தொடங்கியது.
இதில் இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் சபைகளுக்கு ஐ.சி.சி நிர்வாக முடிவுகள் எடுக்கும் விஷயத்தில் கூடுதல் அதிகாரம் வழங்குவது, வருவாயையும் அதிகமாக பகிர்ந்து அளிப்பது உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய சீர்திருத்த வரைவு திட்டத்தை நிறைவேற்றுவதற்கு கூட்டத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
குறிப்பாக பாகிஸ்தான், தென் ஆபிரிக்கா, இலங்கை, வங்கதேசம் கிரிக்கெட் சபைகள் தங்களது ஆட்சேபனையை முன்வைத்தன.
6 மணி நேரத்திற்கு மேலாக விவாதம் நீடித்தது, இதனையடுத்து வரைவு திட்ட பரிந்துரை குறித்து அடுத்த மாதம் மீண்டும் ஒரு முறை விவாதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
இருப்பினும் சில திட்டங்களுக்கு கொள்கை ரீதியாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. நிர்வாக குழு, நிதி மற்றும் வர்த்தக விவகாரங்களை கவனிக்கும் குழு ஆகியவை உருவாக்கப்பட்டு, அவற்றை நிர்வகிக்கும் பொறுப்பு இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து உள்பட 5 நாடுகளை சேர்ந்த உறுப்பினர்களுக்கு வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
இதன்படி இந்திய கிரிக்கெட் தலைவர் என்.சீனிவாசன் 2014ம்ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து ஐ.சி.சி. சேர்மனாக நியமிக்கப்படுவது உறுதியாகி விட்டது.
இதே போல் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை பிரதிநிதி நிர்வாக குழு சேர்மனாகவும், இங்கிலாந்து கிரிக்கெட் சபையை சேர்ந்தவர் நிதி மற்றும் வர்த்தக விவகார குழுத் தலைவராகவும் நியமிக்கப்படுவார்கள்.

0 comments :
Post a Comment