அண்மைக் காலமாக கல்முனை பொலிஸ் பிரிவில் போக்குவரத்து சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
குறிப்பாக ஹெல்மெட் (தலைக் கவசம்) அணியாமல் மோட்டார் சைக்கிள் செலுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
இது விடயத்தில் சிறியவர்- பெரியவர், படித்தவர்- படியாதவர் என்றெல்லாம் வேறுபாடு பார்க்கப்படுவதில்லை.
பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக செல்வோர், அவசர தேவைக்காக- ஆபத்தான கட்டங்களில் வைத்தியசாலை, பாமசி போன்றவற்றுக்கு செல்வோர் என்று யாராக இருந்தாலும் அவர்கள் மீது எந்தவித மனிதாபிமானமுமின்றி- எந்த சலுகையும் செய்யப்படாமல் தண்டப்பணம் விதிக்கப்படுகிறது.
குறைந்த பட்சம் இவர்கள் கூட லஞ்சம் கொடுத்தால் தான் சட்டப் பிடியில் இருந்து தப்பிக்க முடிகிறது.
பிரதான வீதிகளில் சிலர் தப்பித் தவறி பொலிஸாரை எதிர்கொண்டுவிட்டால்- உள் வீதிகளால் தப்பிச் செல்ல முற்பட்டாலும் கூட அவர்கள் துரத்திப் பிடிக்கப்பட்டு- தண்டிக்கப்படுகின்றனர்.
இப்போது இரவு நேரங்களில் உள் வீதிகளால் ஹெல்மெட் போடாமல் செல்வோரைக் கூடப் பிடிப்பதற்காக நடை பவணியாக போக்குவரத்து பொலிஸார் ஊருக்குள் உலா வருகின்றனர்.
இப்படி போக்குவரத்து பொலிஸாரின் கெடுபிடி நிறைந்த கல்முனைப் பிரதேசத்தில்- அதுவும் கல்முனை நகரில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்திற்கே கல்முனை விகாராதிபதி ரன்முத்துகல சங்கரட்ன தேரர் தலைக்கு ஹெல்மெட் அணியாமல் சென்று வருவதையே இப்படங்களில் காண்கிறீர்கள்.
ஏன் இவருக்கு மட்டும் இந்த ஹெல்மெட் சட்டம் இல்லையா?
இவர் அன்றாடம் கல்முனை நகரம் முழுவதும் இப்படியே பயணம் செய்கிறார்.
இதன்போது ஹெல்மெட் போடாத நிலையில் இவரை பல இடங்களில் போக்குவரத்து பொலிஸார் எதிர் கொள்கின்றனர். ஆனால் அவர் பயணிக்கும் மோட்டார் சைக்கிள் நிறுத்தப்படுவதுமில்லை எதுவும் கேட்கப்படுவதுமில்லை.
அவ்வாறாயின் இவருக்கு மட்டும் அந்த ஹெல்மெட் சட்டம் கிடையவே கிடையாதா?
உண்மையில் இந்த சட்ட விதி விலக்கு இந்த தேரருக்கு மட்டுமா? அல்லது மத குருமார் என்ற ரீதியில் அனைத்து தேரர்களுக்குமா? அப்படியென்றால் அது போன்று மௌலவிமார் மற்றும் இந்து பூசகர்களுக்கும் ஹெல்மெட் சலுகை வழங்கப்படுமா?
கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்களே இது உங்கள் கவனத்திற்கு..!

0 comments :
Post a Comment