மட்டக்களப்பு பிரதேசத்தில் பயனாளிகளுக்கு கன்றுகள் வழங்கி வைப்பு - படங்கள்

ந.குஹதர்சன்
மிளகு, இஞ்சி, மஞ்சள் போன்ற பயிர்களை உற்பத்தி செய்யும் வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இச்செயற்றிட்டம் மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டு முதலாம் கட்டத்தில் கமுகு-1200 கன்றுகளும், கறுவா-5000 கன்று நடப்பட்டுள்ளதுடன், இரண்டாம் கட்டத்தில் கமுகு-3000 கன்றுகளும், மிளகு-1000 கன்றுகளும், கறுவா-2000 கன்றுகளும் வழங்கப்பட்டு வருவதுடன், மூன்றாம் கட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் இஞ்சியும், மஞ்சளும் நடப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட விவசாய பணிப்பாளர் பி.உகநாதன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிப்பளை, ஏறாவூர்பற்று, ஆரையம்பதி, வாகரை, ஓட்டமாவடி போன்ற பிரதேச செயலகங்களில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கன்றுகள் வழங்கப்படுவதுடன், அதற்கான ஆலோசனைகளும் இலவசமாக வழங்கப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட விவசாய பணிப்பாளர் பி.உகநாதன் மேலும் தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சிறு ஏற்றுமதி பயிர்களாக கறுவா, கமுகு, என்பன வழங்கும் நிகழ்வு மாஞ்சோலை கிராமத்தில் இடம்பெற்றது.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் எம்.சி.அன்சார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட விவசாய பணிப்பாளர் பி.உகநாதன், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பயிர்க் கன்டுகளை வழங்கி வைத்தனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :