காத்தான்குடியைச் சேர்ந்த சகோதரர் அப்துல் அஸீஸ் கட்டாரில் வபாத் - ஜனாஸா இன்று நல்லடக்கம்

பழுளுல்லாஹ் பர்ஹான்-

ட்டக்களப்பு காத்தான்குடியைப் பிறப்பிடமாகக் கொண்ட உமர்தீன் அப்துல் அஸீஸ் {வயது57} நேற்று திங்கட்கிழமை இரவு கட்டார் ருமைலா வைத்தியசாலையில் வபாத்தாகியுள்ளார்.

அன்னார் முஹம்மட் முர்ஷித் முஹம்மட் முப்தி,யூசுப் அலி ஆகியோரின் புதல்வரும் சட்டத்தரணி அப்துல் ஜவாதின் மருமகனும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று செவ்வாய்க்கிழமை அஸர் தொழுகையைத் தொடர்ந்து அபூ ஹாமூர் மைவாயவாடியில் தொழுகை நடாத்தப்பட்டு அதே மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இவர் கடந்த சில நாட்களாக கட்டார் ருமைலா வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வநத நிலையிலேயே வபாத்தாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


அன்னாரின் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ள விரும்பும் இலங்கை வாழ் சகோதரர்கள் தாமதிக்காது அஸர் தொழுகைக்கு கட்டார் அபூ ஹாமூர் பள்ளிவாயலுக்கு வருகை தருமாரு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

தகவல்:- குடும்பத்தினர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :