ப
த்மபூஷண் விருது கிடைத்தது பற்றி மகிழ்ச்சி தெரிவித்து கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-பல துறைகளிலும் திறமை கொழிக்கும் நாடு நம் நாடு. முக்கியமாக நான் பணியாற்றும் துறையில் தகுதியானவர்கள் பலரும் இருக்கையில் என் பெயர் பத்மபூஷண் பட்டியலில் இடம் பெற்றது எனக்கு கிடைத்த பெரும் பேறாக நான் கருதுகிறேன்.
அரசுக்கு நன்றி, தேர்வாளர்களுக்கு நன்றி. இந்த பட்டத்திற்கு தகுதி உள்ளவனாக இனிமேல்தான் நான் ஆக வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருக்கிறது. நன்றி இந்தியாவிற்கு, நன்றி அன்பிற்கு, பத்மபூஷண் விருது பெற்ற மற்ற சாதனையாளர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் முக்கியமாக என் நண்பர் வைரமுத்துக்கும் வாழ்த்துகள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
0 comments :
Post a Comment