புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் பொது மக்களுக்கும், பொலிசாரிற்கும் இடையில் கிறிக்கட் போட்டி



எம்.எம்.ஜபீர்-

பொது மக்களுக்கும், பொலிசாரிற்கும் இடையே ஐக்கியம், புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு என்பவற்றை விளையாட்டினூடாக ஏற்படுத்தும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்ட கிறிக்கட் போட்டி நேற்று மாலை நற்பிட்டிமுனை அஷ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இக்கிறிக்கட் போட்டி கல்முனை பொலிஸ் அணியினருக்கும், நற்பிட்டிமுனை பிறைவர் விளையாட்டுக் கழகத்திற்கும் இடையே நடைபெற்றது.

அணிக்கு 10 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றியீட்டிய பிறைவர் விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 107 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்முனை பொலிஸ் அணியினர் 10 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 65 ஓட்டங்களைப் பெற்றனர்.

இக்கிறிக்கட் போட்டியில் 42 ஓட்டங்களால் நற்பிட்டிமுனை பிறைவர் விளையாட்டுக் கழகம் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

இந்நிகழ்வில் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.ஏ.கப்பார், நேத்ரா தொலைக்காட்சி செய்தி முகாமையாளர் சீ.பி.எம்.சியாம், கல்முனை பொலிஸ் நிலைய நிருவாகப் பொறுப்பதிகாரி வசந்த, பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி வாஹித், லாபீர் வித்தியாலய பிரதி அதிபர் எம்.எல்.அஷ்ரப் ஆகியோர்கள் அதிதிகளாக கலந்து கொண்டனர்.


























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :