விவசாயிகளின் சகல உரிமைகளையும் பாதுகாத்தது தற்போதைய அரசாங்கமே என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை மாகம் ருகுணுபுரவில் இடம் பெற்ற ஓய்வூதிய கொடுப்பனவை மீண்டும் வழங்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அன்று நெல் களஞ்சியசாலை மற்றும் நெல் விற்பனை சபை ஆகியனவற்றை விற்று விவசாய மக்களை கைவிட்டவர்களை அவர்கள் மறக்கவில்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
விவசாயிகளுக்காக மாவிலாறில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் நாட்டின் சுதந்திரம் வரை முன் எடுத்து செல்லப்பட்டதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 63 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 659 விவசாயிகளுக்கு ஜனவரி மாதம் முதல் புதிய விவசாய ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
இதற்காக, அரசாங்கம் 10 லட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.(sfm)
0 comments :
Post a Comment