நடக்கவுள்ள மாகாணசபைகளுக்கான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவில் அழகு மட்டும் தனியொரு நியமமாகாது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இருப்பினும், மேற்கு மற்றும் தென் மாகாண சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள் யாவரம் வேட்பாளர்களாக நியமிக்கப்படுவார்களென அமைச்சர் கூறினார்.
விண்ணப்பதாரிகள் நாட்டின் சட்டத்தை மீறியுள்ளனரா என்பதும் இவர்கள் நீதிமன்றில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களா என்பதும் முக்கியமாக கவனத்தில் எடுக்கப்படுமென மைத்திரிபால தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற நேர்முகத்திற்கு தோன்றியோரில் நல்ல தோற்றம், வாக்காளர் விருப்பு, ஆளுமை, கல்வி என்பவற்றைக் கவனத்தில் கொண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மத்திய குழு வேட்பாளர்களை தெரிவு செய்யுமென அமைச்சர் கூறினார்.(SLM)
0 comments :
Post a Comment