தே.மு.தி.க.வினர் விருப்ப மனு கொடுத்தனர் - சென்னையில் விஜயகாந்த், பிரேமலதா போட்டியிட மனு

பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் தே.மு.தி.க. வினர் இன்று முதல் விருப்ப மனு கொடுக்கலாம்’’ என்று அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்து இருந்தார்.

அதன்படி, சென்னை கோயம்பேடு தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு விருப்ப மனு வினியோகம் தொடங்கியது. தே.மு.தி.க. இளைஞர் அணி தலைவர் சுதீஷ் இதை தொடங்கி வைத்தார்.

விருப்ப மனுக்களை வாங்குவதற்காக இன்று காலையில் இருந்தே ஏராளமான தே.மு.தி.க.வினர் கட்சி அலுவலகத்தில் குவிந்தனர். விண்ணப்ப மனுக்களை பூர்த்தி செய்து கொடுத்தவர்கள் பொது தொகுதிக்கு ரூ.20 ஆயிரமும், தனி தொகுதிக்கு ரூ.10 ஆயிரமும் செலுத்தினார்கள்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள், செந்தாமரை கண்ணன், வி.என்.ராஜன், யுவராஜ், ஏ.எம்.காமராஜ் ஆகியோர் மனு கொடுத்தனர்.

பிரேமலதா தென் சென்னையில் போட்டியிட வேண்டும் என தென் சென்னை மாவட்ட அவைத்தலைவர் கே.எஸ்.மலர்மன்னன் மனு கொடுத்தார்.

இளைஞர் அணி செயலாளர் சுதீஷ் கள்ளக்குறிச்சி, வேலூர் தொகுதிகளில் போட்டியிட விழுப்புரம் மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் மனு கொடுத்தார்.

இன்று காலை மட்டும் பல்வேறு தொகுதிகளில் போட்டியிடுவதற்காக தே.மு.தி.க. வினர் 184 பேர் விருப்ப மனு கொடுத்தனர்.

தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள், சந்திரகுமார், நல்ல தம்பி, சி.எச்.சேகர், பாபு, முருகேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

வருகிற 30–ந் தேதிவரை விருப்பமனு பெறப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :