வீட்டை காலி செய்ய சொன்னால் ஜன்னல் கதவு வழியாக கீழே குதித்து தற்கொலை செய்வோம்.

கோவை ரங்கே கவுடர் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரபிரசாத்(55). மொத்த மளிகை வியாபாரி. இவரது மனைவி ஜெயசீலி(50). இவர்களுக்கு குமரன்(30), வினோத்(26) என்ற மகன்கள் உள்ளனர்.

ராஜேந்திரபிரசாத்துக்கு சொந்தமாக, ரங்கேகவுடர் வீதியில் 10 சென்ட் பரப்பளவில் அடுக்குமாடி கட்டடம் உள்ளது. இதில், தரைதளத்தில் மொத்த மளிகை கடையும், முதல் தளத்தில் குடோனும், 2வது மற்றும் 3வது தளத்தில் வீடும் உள்ளது. இந்த கட்டிடத்தை அடகு வைத்து சென்னை பைனான்ஸ் நிறுவனத்திடம் அடமானம் வைத்து ராஜேந்திரபிரசாத் 2.41 கோடிக்கு கடன் பெற்றார்.

கடனை திருப்பி செலுத்ததால், கட்டிடம் கடந்த 2009ல் ஏலத்தில் விற்கப்பட்டது.அதை அவரது உறவினர் பிரபாகர் என்பவரே வாங்கினார். ஆனால், உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் வீட்டை ராஜேந்திர பிரசாத் குடும்பத்தினர் காலி செய்யவில்லை.

உயர்நீதிமன்ற அதிகாரிகள், பிரபாகர் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் ஏலம் எடுத்த வீட்டை மீட்க ரங்கேகவுடர் வீதிக்கு நேற்று வந்தனர். ஆனால், இடத்தை காலி செய்ய ராஜேந்திரபிரசாத் மறுப்பு தெரிவித்தார். மேலும், அவரது மனைவி ஜெயசீலி, மகன்கள் குமரன், வினோத் ஆகியோர், கட்டடத்தின் தரைத்தள கதவை மூடிவிட்டு 3வது மாடியில் உள்ள அறைக்கு ஓடினர்.

அங்கிருந்து, சாலையை நோக்கியுள்ள ஜன்னல் கதவை திறந்து, ஜெயசீலி மற்றும் அவரது மகன்கள், இடத்தை காலி செய்ய வற்புறுத்தினால் ஜன்னல் கதவு வழியாக கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வோம் எனவும், வீட்டுக்குள் யாராவது நுழைந்தால் சமையல் காஸ் சிலிண்டரை திறந்து தீ பற்ற வைத்து விடுவோம் என மிரட்டினர். அவர்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :