ந.குஹதர்க்ஷன்
பாடசாலை உப அதிபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன், பேரவையின் பிரதிநிதிகளான ச.ஜெயலவன், த.சந்திரகுமார், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இங்கு 8ம், 9ம், 10ம், 11ம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் உட்பட்டவை வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் பல்தூரிகையும், 8ம் ஆண்டு மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள், பல் தூரிகை மற்றும் சவர்க்காரம் என்பனவும் வழங்கப்பட்டது.
இப்பாடசாலையானது மிகவும் வறிய மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலையாகும். இங்கு சில மாணவர்கள் கல்வி உபகரணங்களுக்கு வசதி இன்மையால் பாடசாலைக்கு வருதை இடை நடுவில் நிறுத்தி விடுகின்றனர்.
இக்கிராமமும் சில குறைபாடுகளுடன் உள்ளது. மாணவர்கள் பல மைல் தூரங்களில் இருந்து நடைபாதையாக வரவேண்டிய நிலை உள்ளது. பெரும்பாலான பிள்ளைகளின் தாய்மார் வறுமை காரணமாக வீட்டுக் பணிப்பெண்ணாக சவூதி போன்ற நாடுகளுக்கு சென்றுள்ளனர்.
இப்பாடசாலையில் 454 மாணவர்கள் உள்ளது. அவர்கள் கித்துள்வௌ, புல்லுமலை, வெலிக்காக்கண்டி, பேரில்லாவெளி, ராஜபுரம் உட்பட்ட பல மைல்தூரம் கொண்ட இடங்களில் இருந்து கல்வி கற்க வரவேண்டி உள்ளது.
துவிச்சக்கரவண்டி இருந்தால் தங்களது போக்குவரத்தை இலகுவாக்கலாம் என தெரிவிக்கின்றனர். அத்தோடு குடிநீர், பாடசாலை பாதணி, விளையாட்டு உபகரணங்கள் போன்றவற்றின் உதவியை எதிர்பார்க்கின்றனர்.
0 comments :
Post a Comment