எம்.பைஷல் இஸ்மாயில்-
அட்டாளைச்சேனை ஆலங்குளம் அக் - றஹ்மானியா வித்தியாலயத்தில் தரம் ஒன்றில் அனுமதி பெற்ற புதிய மாணவர்களை தரம் இரண்டு மாணவர்கள் வரவேற்று ஏடு துவக்கி வைக்கும் வித்தியாரம்ப விழா பாடசாலை அதிபர் ஏ.சீ.எம்.முஸம்மில் தலைமையில் இன்று (30) வியாழக்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் மற்றும் ஏ.எல்.தவம், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எல்.முனாஸ், ஐ.எல்.மனாப், ஏ.எஸ்.எம்.உவைஸ், அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவிச் செயலாளர் ஜெயரூபன், ஆசிரிய ஆலோசகர்களான எஸ்.எல்.மன்சூர், என்.எம்.சம்சுதீன் உள்ளிட்ட பல அதிதிகள் கலந்து கொண்டு ஏடு துவக்கி ஆரம்பித்து வைத்தனர்.
0 comments :
Post a Comment