எஸ்.எல். மன்சூர்-
இவ்வாண்டும் வழமைபோன்று நாட்டின் அரச பாடசாலைகள் முழுவதிலும் தேசிய வைபவமாக கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபத்தின்படி இம்மாதம் 16ஆந்திகதி நடைபெறுகின்றது. இந்த நிகழ்வின் மூலம் மாணவர்கள் எதிர்பார்க்கின்ற விடயங்கள், மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்பார்க்கின்ற விடயங்களைப் பற்றியும் அறிந்திருத்தல் அவசியமாகும்.

இன்று நாடுமுழுவதிலும் பரந்து காணப்படும் 9905(2012இல்உள்ளவாறு) பாடசாலைகளில் சுமார் 40இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பெறுகின்றனர். வருடந்தோறும் 3இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பாடசாலைக் கல்வியுடன் இணைக்கப்படுகின்றனர். அந்தவகையில் இவ்வாண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு இணைத்துக் கொள்ளும் ஒரு வேலைத்திட்டமாக வித்தியாரம்ப நிகழ்வு காணப்படுகின்றது.
இவ்வாறான நிகழ்வுகள் ஆரம்ப வகுப்புக்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் நடைபெறுவது அவசியமாகும் எனக் கல்வியமைச்சு சகல பாடசலை அதிபர்களையும், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் அதனை உறுதிசெய்யுமாறும் கேட்டிருக்கின்றது. இந்த வகையில் இவ்வைபங்களை ஒழுங்கு செய்து நாட்டின் கல்விமுறைகள், ஆரம்பக்கல்வி விருத்திச் செயற்பாடுகள், புதிய கல்விச் சீர்திருத்தங்கள், அரசாங்கம் கல்விக்காக ஒதுக்கப்படுகின்ற நிதிகள், கல்வியின் நோக்குகள் சிந்தனைகள் போன்ற விடயங்களை அங்கு சமூகளிக்கின்ற பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் கூறப்படுதல் முக்கியமாகும்.
பொதுவாக வித்தியாரம்ப நிகழ்வுகள் பாடசாலைகளில் உரிய முறைப்படி நடைபெற்றாலும் இதன் முக்கியத்துவம் சரியான முறையில் பேணப்படுகின்றதா? அங்கு சமுகளிக்கின்ற சமூகத்தி;ன்; முன்னே முன்வைக்கப்படுகின்ற கருத்துக்கள் பெற்றோர்களிடம் கல்விமீதான பற்றினை ஏற்படுத்துகின்றதா? பாடசாலைக்குள்ள கடமைக்கூறுகளை சரியான முறையில் அச்சமூகத்தில் முன்வைக்கப்படுகின்றதா?

என்பததெல்லாம் ஆராயப்படவேண்டியவைகளாக இருந்தாலும், சரியான முறையில் பாடசாலையின் எண்ணக்கருக்களை இந்த சமுதாயத்தின் முன்னே எடுத்தியம்புவதற்கான ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில்தான் அப்பாடசாலையினது வெற்றி தங்கியுள்ளது. பெற்றோருக்கும் பாடசாலைக்குமான உறவைப் பலப்படுத்தி, அதன் ஊடாக பாடசலைக் கல்வியை உயிரோட்டமுள்ளதாக்கும் நிலைமையை அன்றைய தினத்திலிருந்து உள்வாங்குவதும் அவசியமாகும்.
பின்வரும் விடயங்களை கவனத்திற் கொண்டு வித்தியாரம்ப நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் கல்வி பற்றியும், பாடசாலைக்குள் என்ன நடைபெறுகின்றது என்பதனையும் வருகை தருகின்ற சமூகம் அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். அந்தவகையில் கல்வி என்பது ஒருவர் இந்த உலகில் பெறுகின்ற அறிவு, அனுபவம், ஆற்றல் ஆகியவற்றின் தொகுப்பு எனவும், ஒருவர் பெறுகின்ற கல்வியானது அவரது ஆளுமைக்கும், ஆற்றலுக்குமான அடித்தளமாக இருந்து அவரின் ஒவ்வொரு செயலையும் சிறப்பாக வழிநடாத்த உதவுவனவாகவும் காணப்படுகின்றது.

சிறந்தமுறையில் கல்வியைப் பெற்றவர்கள் மற்றவரிடமிருந்து மாறுபட்டு, மற்றவர்களுக்கு வழிகாட்டுகின்ற சிறப்புப்பெற்றவர்;களாக இருப்பார்கள். நுட்பமாகச் செயற்படுகின்ற கூர்மையான அறிவுடையவராக இருந்து வழிநடாத்துவார்கள் எனவும்,
ஒருவர் பெறுகின்ற அறிவென்பது ஆரம்பத்திலிருந்தே வளர்க்கப்பட்டு வருவதுடன் அது இயற்கையாகவும் உருவாக்கம் பெற்றும் விடுகின்றது. தரம் ஒன்றில் பிள்ளைகள் சேருகின்றபோது அப்பிள்ளைகள் பல்வேறுபட்ட சூழல்களிலிருந்தே வருகின்றார்கள். அவர்கள் வௌ;வேறு இயல்புகளையும், ஆற்றல்களையும் கொண்டுள்ளனர். ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள். அவர்களை வழிநடாத்திச் செல்லும் பொறுப்பு ஆசிரியர்களுடையது. எனவே, பிள்ளைகள் ஒவ்வொருவரையும் பற்றித் தனித்தனியாக இனங்காணுதலும், வழிகாட்டுதலும் மிகமிக அவசியமாகும் என்பதை ஆசிரியர்கள் குறிப்பாக ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் உணர்ந்து செயற்படுதல் முக்கியமாகும்.
பிள்ளையின் அடிப்படையான உரிமைகளில் முக்கியமானது கல்விபெறுகின்ற உரிமையாகும். அந்தவகையில் ஆரம்பக்கல்வி கட்டாயமாகவும், இலவசமாகவும் கிடைப்பதை உறுதிப்படுத்துதல், ஒவ்வொரு பிள்ளைக்கும் இடைநிலைக் கல்வி பெறும்வாய்ப்பை வழங்குதல், ஆற்றலின் அடிப்படையில் எல்லோருக்கும் உயர்கல்வி கிடைக்கச் செய்தல், பாடசாலையின் ஒழுக்க விதிகள் சிறுவர்களின் உரிமைகளையும் கௌரவத்தையும் மதிப்பதாகவும், இந்த உரிமையை நிலைநாட்டும் பொருட்டு அரசாங்கம் சர்வதேச ஒத்துழைப்பில் ஈடுபடல், பிள்ளையின் ஆளுமை, திறமை, உடல் மற்றும் உள ஆற்றல்களை முழுமையாக விருத்தி செய்;வதும் கல்வியின் நோக்கமாயிருத்தல் வேண்டும்.

பருவமடைந்தும் சுதந்திரமான சமூதாயத்தில் ஊக்கத்துடன் வாழ்வதற்கும், பெற்றோரைக் கனம்பண்ணுவதற்கும், தன் சொந்தக் கலாசாரத் தனித்துவம் மொழி, விழுமியங்கள் ஆகியவற்றை மதிப்பதற்கும் கல்வி மூலம் சிறுவர்களைத் தயார்படுத்துதல் வேண்டும் என்று பிள்ளையின் உரிமைகள் எடுத்தியம்புகின்றன. இந்த அடிப்படையில் கட்டாயக் கல்விக் கொள்கையை அமுல்படுத்துகின்ற நமது நாட்டில் இவ்வாறான சிறுவர்கள் உரிமைகள் கட்டாயம் அமுலிலுள்ளது என்பதையும் கவனத்திற் கொண்டு நடைமுறைப்படுத்துவதில் உறுதியாக இருந்து செயற்படுதல் முக்கியமாகும்.
மேலும், ஒவ்வொரு பிள்ளையினதும் அறிவுவிருத்தியை மட்டுமல்ல, உடல் விருத்தி, உளவிருத்தி, மனப்பாங்கு விருத்தி, ஆளுமைவிருத்தி, சமூகவிருத்தி போன்றவற்றையும் மேம்படுத்துதல் ஆசிரியர்களினது பிரதான பொறுப்பாகும். எனவே, பாடசாலைக்கு வருகின்ற பிள்ளைகளின் இயல்பான ஆற்றல்களை அறிந்து அவற்றை ஆக்கபூர்வமாக வெளிக் கொணரத்தக்கவாறு கற்றல்செயற்பாடுகளை நெறிப்படுத்த வேண்டியதும், அவர்களது பல்வேறு நடத்தைக் கோலங்களைச் சீர்படுத்தவேண்டியதும் ஆசிரியர்களது பணியாகும்.

பொதுவாகக் கூறினால் பிள்ளையின் ஆளுமையை அபிவிருத்தி செய்து அவனோ அல்லது அவளோ வாழ்க்கையின் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளக்கூடியவராக ஓர் உறுதுதியான அடித்தளத்தை இடுகின்ற நோக்கில் அமைந்துள்ள தற்காலக் கல்விச் சீர்திருத்தம் கடந்த 1999ஆம் ஆண்டு நாடுமுழுவதிலுமுள்ள சகல பாடசாலைகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது. ஆரம்பக்கல்விக்கான கலைத்திட்டமானது பிள்ளையின் இயற்கையான திறன்களை விருத்தி செய்ய உதவும் பண்புசார் ஆரம்பக்கல்வியை வழங்குவதை இலக்காகக் கொண்டு இன்றுவரை அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
பாடசாலைக்குள் வருகின்ற ஒரு பிள்ளையின் வாழ்வை மேம்படுத்துவதில் முக்கியபங்கினை வகிக்கின்றவர்கள் ஆசிரியர்களே. இதேபோன்றுதான் பிள்ளையின் வீட்டுச் சூழலும் காணப்படுகின்றது. பிள்ளையின் வீட்டுச் சூழல் பிள்ளை கற்கும் இடமாக மாற்றம் பெறவைப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்துதல் அவசியமாகும். ஆரம்பப் பாடசாலைப் பருவம் என்பது பிள்ளைவிருத்தியின் தீர்க்கமான ஒரு பருவமாகும். எதிர்காலத்தில் வெற்றிகரமான ஒரு பிரஜையாகச் செயற்படுவதற்குத் தேவையான ஆற்றல்களின் உருவாக்கமும், இசைவாக்கமும்; இவ் ஆரம்பக் கல்விப் பருவத்திலேயே நிகழ்கின்றன.

பிள்ளைகள் தமது அயற் சூழலுடன் இடையறாது தொடர்புற்று அனுபவங்களைப் பெறுவதற்கும் செயற்பாடுகளினுடாக சூழலுடன் தொடர்புறுவதற்கும் மகிழ்ச்சியையும் கணிப்பையும், அனுபவிப்பதற்கும் தாம் செய்யும் வேலைகளினூடாக வெற்றியுணர்வை அடைவதற்கும் ஆசிரியர்களும், பெற்றோர்களும் முழுமையான வாய்ப்புக்களை வழங்க வேண்டும். இவ்வாய்ப்பானது பிள்ளையின் விருத்தியை உச்ச அளவில் நிகழச் செய்யும். என்பதையும் நாம் ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்வதும் முக்கியமாகும்.
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பாடசாலைக்குச் சேர்த்துவிட்டால் தமது பிரச்சினைகள் முடிவடைந்துவிட்டது என நினைப்பதிலிருந்து விடுபட்டு, தன்னுடைய பிள்ளையின் ஆரம்பநாளை மிகமிக சந்தோஷமான முறையில் கழிக்க உதவுவதுடன், பிள்ளையின் முதல்நாள் அனுபவமானது, பாடசாலை வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சிகரமானதாக அமைவதற்குரிய நடவடிக்கையில் ஒத்துழைத்து, முதல் நாளன்றே அங்கு வழங்கப்படுகின்ற வரவேற்பில் மகிழ்ச்சியடைந்து அவன் பாடசாலையை விரும்பும் இடமாக நினைக்கச் செய்வதில் வித்தியாரம்ப நிகழ்;வுகள் களை கட்டும்படியாக அமைதல் அவசியமாகும்.
இவ்வாண்டின் ஆரம்பத்திலிருந்தே திட்டமிடப்பட்ட முறையில் கல்விச் செயற்பாட்டின் பண்புசார் தரத்தினை விருத்தி செய்யவும், அதற்கான முழுமையான பயனை பாடசாலைச் சமூகத்தில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை பயன்மிக்கதாக மாற்றியமைக்கும் நோக்குடனும் கல்வியமைச்சு உறுதிபூண்டுள்ளது. நாட்டின் மானிடவளம் கட்டியெழுப்படுவது பாடசாலையின் மூலமாகும்.

விலைமதிப்பிடமுடியாத பெறுமதியான உயிர்களை எதிர்கால வேலை உலகுக்குப் பொருத்தமானவாறு உருவாக்கும் மிகப்பெரிய பொறுப்புக்கள் பாடசாலைகளுக்கே உள்ளன. துரிதமாக மாற்றமடைந்து வருகின்ற உலக சமூகத்தில் எதிரே உள்ளசவால்களை இனங்கண்டு தமக்குக் கிடைக்கப்பெற்றுள்ள குறிகிய காலத்திற்குள் மாணவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்குப் பாடசாலையினுள்ளும், வெளியிலும் காணப்படுகின்ற வளங்களையும் திட்டமிட்டு செயற்படுத்துவதும் முக்கியமாகும
அதேவேளை பாடசாலையின் ஆரம்பக் கட்டமைப்பின் விசேட பண்புகளையும் பெற்றோர்கள் அறிந்திருத்தல் அவசியமாகும். ஐந்து ஆண்டுகளைக் கொண்ட ஆரம்பக்கல்வி கலைத்திட்டத்தில் முதன்மை நிலை ஒன்று, முதன்மை ந்pலை 2, முதன்மை நிலை 3 எனப்பிரிக்கப்பட்டு அவை தரம் 1 தொடக்கம் தரம் 5வரையான வகுப்புக்கள் இதனுள் அடங்கியுள்ளன. தேர்ச்சிமையக் கலையத்திட்டத்தை உள்ளடக்கி, மாணவர்கள் விருத்தி செய்யவேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்ற தொடர்பாடல், சுற்றாடல், ஆளுமை விருத்தி, வேலை உலகிற்குத் தயார் செய்தல், சமயமும் ஒழுக்கமும், ஓய்வும் விளையாட்டும், கற்றலுக்குக் கற்றல் ஆகிய அடிப்படைத் தேர்ச்சிகளை தேசிய குறிக்கோள்களை அடைவதற்கான முன்மொழிவுகளாக இவை ஆரம்பக்கல்வியில் வழங்கப்பட்டுள்ளன.

இதனை அடிப்படையாகக் கொண்டு மொழி, கணிதம், சமயம், சுற்றாடல்சார் செயற்பாடுகள், செயற்பாடுகள் சார்ந்த வாய்மொழி ஆங்கிலமும், இரண்டாம் தேசிய மொழியும், இணைப்பாடவிதானச் செயற்பாடுகள் என்பனவும் முறையான கற்றல் கற்பித்தல் ஊடாக பாடத்திட்டத்துடன் இயைந்ததாக விளையாட்டுக்களுக்கும் செயற்பாடுகளுக்கும் அதிக அவகாசம் கொடுத்து கற்பித்தல் முறைகளை ஆசிரியர்கள் வடிவமைக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இன்று அரசு இலவச உணவு, இலவச சீருடை, இலவச புத்தகம் போன்றனவும் இலவசக் கல்வியை உறுதிப்படுத்துகின்றன. இதன் மூலம் மாணவர்களின் உயர்விழுமியத்தை மேம்படுத்தவும், அரசியல் தலையீடுகள், முறையற்ற வித்தில் பாடசாலையின் நிருவாகம் நடைபெறுதல், பொதுப்பரீட்சைகளில் எழுந்துள்ள பிரச்சினைகள், சமுதாயத்தில் அரசினால் நிருவகிக்கப்படுகின்ற பாடசாலைகளின் கல்வித்தரம் போன்றவற்றை மேற்பார்வை செய்கின்ற பாரியபொறுப்பு மாணவர்களின் பெற்றோர்களிடமே உண்டு. எனவே, சமுதாயத்திற்கே பாடசாலை.

ஆனால் பாடசாலைக்காக சமூகம் இல்லை. என்பதை உணர்ந்து பிள்ளைகளின் ஆரம்பக்கல்விக்கு முத்தாப்பாய் அமைந்துள்ள வித்தியாரம்ப நிகழ்வுகளில் பங்குபற்றி, பாடசாலைகளின் பெறுமானத்தையும் எதிர்கால நற்பிரஜைகளின் உருவாகத்திற்கு ஒத்துழைப்புச் செய்கின்ற பெற்றோராக உறுதிபூணுவோம்.
0 comments :
Post a Comment