கல்முனையில் கட்டிமுடிக்கப்பட்ட புதிய நூலகத்தில் முன்னாள் அமைச்சர் மன்சூரின் பெயர் எங்கே?


யு.எம்.இஸ்ஹாக்-

ல்முனை கரவாகு மேற்கு பழைய பொது நூலக கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரின் பெயர் பொறிக்கப்பட்ட நினைவூக்கல் புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட பொது நூலகத்தில் பொறித்து வைக்கப்படாதது மனித நேயமற்ற, அரசியல் நாகரிகமற்ற செயல்பாடாகும்.

இவ்வாறு கல்முனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் கரவாகு மேற்கு உப அலுவலக முன்னாள் அதிகாரமளிக்கப்பட் அதிகாரியூமான ஏ.அப்துல் கபூர் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் மற்றும் கல்முனை மாநகர மேயர் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இது விடயமாக அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

கல்முனைத் தொகுதி தமிழ் முஸ்லிம் மக்களுக்கு காலத்தால் அழியாத சேவைகளைச் செய்த மறக்க முடியாத அரசியல் வாதியாக அன்றும் இன்றும் இருப்பவர் முன்னாள் அமைச்சர் மன்சூர் ஆவார். அவர் தனது அரசியல் வாழ்வில் கல்முனைத் தொகுதி தமிழ் முஸ்லிம் மக்களுக்காக செய்ய வேண்டும் என்று கண்ட கனவூகளில் ஒன்றுதான் பொது மக்களின் அறிவூப் பசிக்கும் மாணவர்களின் உயர் கல்விக்கும் கல்முனை பிரதேசங்கள் தோறும் பொது நூலகங்களை அமைக்க வேண்டும் என்று நினைத்தார்.

இந்த நோக்கத்தின் அடிப்படையில்தான் கல்முனைத் தொகுதியில் கரவாகு மேற்கு, கரவாகு வடக்கு, கரவாகு தெற்கு, கரவாகு மத்தி போன்ற நான்கு நூலகங்களை அமைத்துக் கொடுத்ததை மக்களினால் ஒரு போதும் மறக்க முடியாத சேவையாகும்.. இவ்வாறு அமைக்கப்பட்ட பொது நூலகங்களில் ஒன்றுதான் நற்பிட்டிமுனை இசேனைக்குடியிருப்பு தமிழ் முஸ்லிம் மக்களின் கல்வி அபிவிருத்தி கருதி 1986 காலப் பகுதியில் அமைக்கப்பட்ட கரவாகு மேற்கு பொது நூலகமாகும்.

இந்த பொது நூலகம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் “நெல்சிப்” திட்டத்தின் கீழ் நித ஒதுக்கீடு செய்யப்பட்டு கல்முனை மாநகர சபையின் வழிகாட்டலில் முதற்கட்ட பணிகள் கட்டி முடிக்கப்பட்டு இம்மாத இறுதிக்குள் திறந்து வைக்கப்படவூள்ளது.. இந்தப் புதிய பொது நூலக கட்டிடத்தில் 1986 காலப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மன்சூரின் பெயர் தாங்கிய நினைவூக்கல் வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளினால் நடவடிக்கை மேற் கொள்ளப்படாமை அரசின் கொள்கையா? அல்லது இப்பிரதேச அரசியல் வாதிகளின் சின்னத்தனமான செயற்பாடா? என்பதை மக்களால் அறிய முடியாதுள்ளது.

முன்னாள் அமைச்சர் மன்சூர் இந்த நாட்டில் உள்ள எல்லா இன மக்களினாலும் இன்றும் மதிக்கப்படுகின்ற முன்னணி அரசியல் வாதியாவார். அவர் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் போது அவரினால் செய்யப்பட்ட சேவைகளை தற்போதய குறுகிய எண்ணங் கொண்ட அரசியல் வாதிகளால் மழுங்கடிக்கப்படுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :