பழுலுல்லாஹ் பர்ஹான்-
இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் என்பன அகில இலங்கை ரீதியாக மெற்கொள்ளும் இளைஞர் சேவை உத்தியோகத்தர் மதிப்பீட்டில் 2013 ஆம் ஆண்டு தேசிய ரீதியல் முதல் இரண்டு இடங்களையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமைபுரியும் அதிகாரிகள் பெற்றுள்ளனர்.
2013 ஆம் ஆண்டு தை மாதம் முதல் மார்கழி மாதம் வரை இளைஞர் சேவை அதிகாரிகள் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வேலைத்திட்டங்கள்,வெளி நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள்,இளைஞர் கழகங்களினுடாக சுயமாக மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள்,உத்தியோகத்தர்களின் முகாமைத்துவத்திறன் உட்பட பல்வேறு தர ரீதியாக மேற்கொள்ளப்படும் மதிப்பிட்டின் மூலமே அதி கூடிய புள்ளிகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் இளைஞர் சேவை அதிகாரிகள் தேசிய ரீதியில் முதல் இரண்டு இடங்களையும் பெற்றுள்ளனர்.
தேசிய ரீதியல் 25 பேர் தெரிவு செய்யப்பட்ட நிலையிலேயே இவர்கள் முன்னணியில் உள்ளனர்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்டப் பணிமனையில் கடமைபுரியும் மண்முனை மேற்கு வவுணதீவப் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி மா.சசிகுமார் 4986 புள்ளிகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினையும் தேசிய ரீதியாக முதலாமிடத்தினையும் பெற்றுள்ள நிலையில் மண்முனை வடக்குப் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி நா.குகேந்திரா 4876 புள்ளிகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் இரண்டாமிடத்தினையும் தேசிய ரீதியாக இரண்டாமிடத்தினையும் பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரமையினால் வெள்ளிக் கிழமை இரவு மகரகம இளைஞர் மத்திய நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது ரிஸ்கவரி மற்றும் பிளாட்னா ரக மோட்டார் சைக்கிளகள்; வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் தலைவர் சட்டத்தரணி லலித் ரியூம் பெரேரா தலைமையில் இடம்பெற்ற வருடாந்த உத்தியோகஸ்தர் ஒன்று கூடலும் விருது வழங்கும் நிகழ்வும் இடம்பெற்ற போது இளைஞர் விவகார மற்றம் திறன் அபிவிருத்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு விருதுகளையும் பரிசில்களையும் வழங்கிக் கௌரவித்தார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாணப் பணிப்பாளர் கே.தவராசா,மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ்,மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகளான திருமதி ஜே.கலாராணி,திருமதி நிசாந்தி அருள்மொழி,உமர்லெப்பை ஆகியோரின் வழிகாட்டலில் கடமையாற்றியே இவ் அதிகாரிகள் மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட அதிகாரிகள் முதல் இரண்டு இடங்களையும் பெற்ற இதே வேளை மாத்தற மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.பி.ஆர்.கேமந்த 2826 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தினை பெற்றுள்ளதுடன் துமிந்த சம்பத் 2619புள்ளிகளைப் பெற்ற நான்காமிடத்தினையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment