ஓடும் பஸ்சில் மாணவர்கள் அட்காசம் செய்ததால், டிரைவர் பஸ்சை நடு வழியில் நிறுத்திவிட்டு சென்றார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பிராட்வேயிலிருந்து, எம்எம்டிஏ காலனி வரை தினமும் (15ஜி) மாநகர பஸ், இயக்கப்படுகிறது. வழக்கம்போல் அந்த பஸ் பிராட்வேயிலிருந்து, எம்.எம்.டி காலனி நோக்கி நேற்று காலை 9 மணியளவில் சென்று கொண்டிருந்தது. பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் இதில் பயணம் செய்வார்கள். சென்ட்ரல் ரயில் நிலைய பஸ் நிறுத்தத்தில் வழக்கம்போல் பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் பஸ்சில் ஏறியுள்ளனர்.
காலை நேரம் என்பதால் பஸ்சில் அதிகளவில் பயணிகள் இருந்தனர். கல்லூரி மாணவர்கள் திடீரென பஸ்சின் கூரையில் தாளம் தட்டி, பாட்டு பாடி கூச்சல் போட்டு தகராறு செய்துள்ளனர். மாணவர்களின் அட்டகாசம் தாங்க முடியாமல் பஸ்சில் இருந்த மற்ற பயணிகள், அமைதியாக வருமாறு கூறியுள்ளனர். அதை கேட்காமல் அவர்கள் தொடர்ந்து பாட்டு பாடிக்கொண்டே கூச்சலிட்டுள்ளனர். இதனால், கோபமடைந்த பயணிகள் இதுகுறித்து டிரைவரிடம், மாணவர்களை கண்டிக்குமாறு கூறியுள்ளனர்.
டிரைவரும் மாணவர்களை அமைதியாக வருமாறு கூறியுள்ளார். எனினும் தொடர்ந்து தகராறு செய்தபடியே பயணித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த டிரைவர், எழும்பூர் ரயில் நிலையத்தின் பின்புறம் பெரியார் நெடுஞ்சாலையில் பஸ்சை நிறுத்திவிட்டு இறங்கி சென்றுவிட்டார். பஸ் நடுவழியில் நின்றதால், உள்ளே இருந்த பயணிகள் கண்டக்டரிடம் பஸ்சை எடுக்குமாறு சத்தம் போட்டனர். இதையடுத்து, கண்டக்டர் டிரைவரை சமாதானப்படுத்தி, கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கலாம் என்று கூறியுள்ளார்.

பின்னர், இருவரும் கமிஷனர் அலுவலகம் நோக்கி புகார் கொடுப்பதுபோல் சென்றுள்ளனர். இதை அறிந்த மாணவர்கள் உடனடியாக பஸ்சில் இருந்து இறங்கி ஓடிவிட்டனர். இதையடுத்து, டிரைவர் பஸ்சை அங்கிருந்து ஓட்டிச் சென்றார். டிரைவர் நடுவழியில் பஸ்சை நிறுத்தியதால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
0 comments :
Post a Comment